AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ரீ-ரிலீஸாகும் மணிரத்னத்தின் இதயத்தை திருடாதே படம் – வைரலாகும் தகவல்

Idhayathai Thirudathe Movie Re Release | பிரபல இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் இதயத்தை திருடாதே. இந்தப் படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

ரீ-ரிலீஸாகும் மணிரத்னத்தின் இதயத்தை திருடாதே படம் – வைரலாகும் தகவல்
இதயத்தை திருடாதேImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 13 Aug 2026 17:28 PM IST

பான் இந்திய மொழிகளில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் மணிரத்னம். இவரது இயக்கத்தில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் கடந்த 1989-ம் ஆண்டு மே மாதம் 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் கீதாஞ்சலி. தெலுங்கு சினிமாவில் உருவான இந்தப் படத்தின் மூலம் இயக்குநர் மணிரத்னம் தெலுங்கு சினிமா ரசிகர்களிடையே இயக்குநராக முதன்முதலில் அறிமுகம் ஆனார். இந்த கீதாஞ்சலி என்ற படத்தை தான் தமிழ் சினிமாவில் இதயத்தை திருடாதே என்ற பெயரில் மொழி மாற்றம் செய்து வெளியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தப் படத்தில் நடிகர் நாகர்ஜுனா நாயகனாக நடித்து இருந்த நிலையில் நடிகை கிரிஜா நாயகியாக நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் விஜயகுமார், விஜயசந்தர், வேலு, பிரதீப் சக்தி, சுமித்ரா, ராதாபாய், ஜானகி, சில்க் ஸ்மிதா, டிஸ்கோ சாந்தி, பத்மா, பிரியா மற்றும் நீனா என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்து இருந்த நிலையில் படத்தைப் போல பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

ரீ-ரிலீஸாகும் மணிரத்னத்தின் இதயத்தை திருடாதே படம்:

பான் இந்திய மொழிகளில் சமீப காலமாக ரீ ரிலீஸ் என்பது மிகவும் அதிக அளவில் நடைபெறும் ஒன்றாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மணிரத்னம் இயக்கத்தில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த இதயத்தை திருடாதே படத்தை ரீ ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். அதன்படி படம் வருகின்ற 28-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2026-ம் ஆண்டு ரீ ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… நடிகர் வைபவின் மாறுவேஷம் படத்தின் ரிலீஸ் எப்போது? வெளியானது அப்டேட்

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… சிக்மா படதிலிருந்து யுவன் குரலில் வெளியானது அய்யயோ அம்மாடி பாடல்!

Follow Us