AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கலகலப்பாக வெளியானது பியார் பிரேமா கல்யாணம் படத்தின் ட்ரெய்லர்

Pyaar Prema Kalyanam Official Trailer Out Now | தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வந்த இளன் நாயகனாக அறிமுகம் ஆகி உள்ள படம் பியார் பிரேமா கல்யாணம். இந்தப் பட்த்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றது.

கலகலப்பாக வெளியானது பியார் பிரேமா கல்யாணம் படத்தின் ட்ரெய்லர்
பியார் பிரேமா கல்யாணம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 12 Aug 2026 17:35 PM IST

தமிழ் சினிமாவில் இளைஞர்களை கவரும் விதமாக படங்களை இயக்கி ரசிகர்களிடையே பிரப்லாமானவர் இயக்குநர் இளன். இவர் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான பியார் பிரேமா காதல் என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார். இயக்குநர் இளன் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படமே ரசிகர்களிடையே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இந்தப் படத்தில் நடிகர்கள் ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா வில்சன் இருவரும் முன்னணி வேடத்தில் நடித்து இருந்த நிலையில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா படத்திற்கு இசையமைத்தது மட்டும் இன்றி படத்தை தயாரிக்கவும் செய்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் வெளியான போது ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இந்தப் படத்திற்கு அடுத்ததாக இயக்குநர் இளன் இயக்கத்தில் வெளியான படம் ஸ்டார்.

இந்த ஸ்டார் படத்தில் நடிகர் கவின் நாயகனாக நடித்து இருந்த நிலையில் இவருடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்த நிலையில் படத்தைப் போல பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து இளன் மூன்றாவதாக தான் இயக்கும் படத்தில் அவரே நாயகனாக நடித்து உள்ளார். அந்தப் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றது.

கலகலப்பாக வெளியானது பியார் பிரேமா கல்யாணம் படத்தின் ட்ரெய்லர்:

அதன்படி இயக்குநர் இளன் எழுதி இயக்கி நாயகனாக நடித்து உள்ள படம் பியார் பிரேமா கல்யாணம். இந்தப் படத்தின் மூலம் அவர் நாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகிறார். மேலும் இந்தப் படத்தில் இளனுக்கு ஜோடியாக சான்வி மேக்னா நடித்து உள்ளார். இந்தப் படம் நேரடியாக திரையரங்குகளில் வெளியாகாமல் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாக உள்ளது. மேலும் படம் வருகின்ற 21-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2026-ம் ஆண்டு நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் நேரடியாக வெளியாக உள்ளது. இந்த நிலையில் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… விஸ்வநாத் & சன்ஸ் படத்தில் வரும் அந்த காட்சி உண்மையிலேயே சூர்யா வாழ்க்கையில் நடந்த சம்பவம் – வைரலாகும் தகவல்

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… GV Prakash: எனது அந்த படங்களுக்கும் தேசிய விருது கிடைக்கும் என்று நினைத்தேன் – ஜி.வி. பிரகாஷ்!

Follow Us