சூறாவளி காற்று.. ஆந்திரா அருகே கரையை கடந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. எத்தனை மாவட்டங்களில் மழை இருக்கும்?
23-ம் தேதி இரவு 11.30 மணியளவில் களிங்கப்பட்டினத்திற்கு தென்மேற்கே சுமார் 30 கி.மீ. தொலைவிலும், விசாகப்பட்டினத்திற்கு வடகிழக்கே 80 கி.மீ. தொலைவிலும் இந்த அமைப்பு நிலைகொண்டிருந்தது. பின்னர் வடமேற்கு திசையில் நகர்ந்து கரையைக் கடந்தது. கரையைக் கடக்கும் செயல்முறை சுமார் 2 முதல் 3 மணி நேரம் நீடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 24, 2026: வங்கக்கடலில் உருவான தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிசா கடற்கரைப் பகுதிகளுக்கு இடையே நள்ளிரவில் கரையைக் கடந்தது. களிங்கப்பட்டினம் அருகே கரையைக் கடந்த இந்த அமைப்பு, தொடர்ந்து தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே நீடித்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆந்திரா அருகே கரையை கடந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்:
Cyclone Arnab: ఆకాశంలో నల్లటి మేఘాలు.. క్షణాల్లో విధ్వంసం.. ‘ఆర్నాభ్’ తుఫాన్ ధాటికి భద్రాద్రి అతలాకుతలం pic.twitter.com/e5LrARDQJA
— MAHESH PATEL (@MAHESHN11262061) September 23, 2026
23-ம் தேதி இரவு 11.30 மணியளவில் களிங்கப்பட்டினத்திற்கு தென்மேற்கே சுமார் 30 கி.மீ. தொலைவிலும், விசாகப்பட்டினத்திற்கு வடகிழக்கே 80 கி.மீ. தொலைவிலும் இந்த அமைப்பு நிலைகொண்டிருந்தது. பின்னர் வடமேற்கு திசையில் நகர்ந்து கரையைக் கடந்தது. கரையைக் கடக்கும் செயல்முறை சுமார் 2 முதல் 3 மணி நேரம் நீடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் தாக்கத்தால் வட ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசாவில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என்றும், அடுத்த 48 மணி நேரத்திற்கு பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பலத்த காற்றுடன் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. கடல் சீற்றமாக காணப்படுவதால், வரும் 27-ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: வலி நிவாரணிகள், ஆன்டிபயாடிக் மருந்துகளை தன்னிச்சையாக பயன்படுத்த வேண்டாம்: CDSCO எச்சரிக்கை
கடலோர மாவட்டங்களில் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:
ஒடிசாவின் பல மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பாலசோர் மாவட்டத்தில் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததால் தீயணைப்புப் படையினர் மீட்பு உபகரணங்களுடன் களமிறங்கி சாலைகளை சீரமைத்து வருகின்றனர். ரெமுணா பகுதியில் வீடு இடிந்து ஒருவர் உயிரிழந்ததுடன், ஒரு குழந்தை காயமடைந்துள்ளது.
ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் கடலோரப் பகுதிகளில் சிவப்பு எச்சரிக்கை தொடர்கிறது. 10 கடலோர மண்டலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நாகாவளி, வம்சதாரா ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதால் 53 கிராமங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: ஞானேஷ் குமாரை நீக்க வேண்டும்; 3 மாநிலங்களில் மறுதேர்தல் நடத்த வேண்டும்: உத்தவ் தாக்கரே
இதனிடையே, மோசமான வானிலை காரணமாக விஜயவாடாவில் இருந்து விசாகப்பட்டினம் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நாக்பூருக்கு திருப்பிவிடப்பட்டது. போகாபுரம் விமான நிலையத்தில் இரண்டு முறை தரையிறங்க முயன்றும் முடியாததால், IX 1373 விமானம் நாக்பூரில் பாதுகாப்பாக தரையிறங்கியது. இதில் அமைச்சர்கள் அச்சென்னாயுடு, கொண்டப்பள்ளி சீனிவாஸ், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பயணித்தனர்.