AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தேர்தல் ஆணையத்திற்குள்ளேயே வெடித்ததா பஞ்சாயத்து?.. பரவிய தகவலும் அதிகாரிகளின் விளக்கமும்!!

Tension in Election Commission of India: வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்த நடவடிக்கை விவகாரத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் இரு தேர்தல் ஆணையர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவல்களைத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் முற்றிலுமாக மறுத்துள்ளனர். அனைத்து முடிவுகளும் ஒருமனதாகவே எடுக்கப்பட்டு வருவதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்திற்குள்ளேயே வெடித்ததா பஞ்சாயத்து?.. பரவிய தகவலும் அதிகாரிகளின் விளக்கமும்!!
கோப்புப் படம்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 23 Sep 2026 14:13 PM IST

இந்தியத் தேர்தல் ஆணையம் நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பை வழிநடத்தும் மிக முக்கியமான அரசியலமைப்பு அமைப்பாகும். நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலைத் தூய்மைப்படுத்துவது, புதிய வாக்காளர்களைச் சேர்ப்பது மற்றும் தேர்தல்களை நேர்மையாக நடத்துவது உள்ளிட்ட பணிகளைத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இத்தகைய சூழலில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான கொள்கை முடிவுகளில் தலைமைத் தேர்தல் ஆணையருக்கும், பிற தேர்தல் ஆணையர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் வெடித்துள்ளதாகவும், இது குறித்து மத்திய அமைச்சரவைச் செயலாளருக்குக் கடிதம் எழுதப்பட்டுள்ளதாகவும் வெளியான தகவல்கள் அரசியல் மற்றும் அரசு வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இருப்பினும், இந்த விவகாரம் குறித்துத் தேர்தல் ஆணைய மூத்த அதிகாரிகள் தற்போது முக்கிய விளக்கமளித்துள்ளனர்.

இதையும் படிக்க: “ரூ.2,700 மருந்து ரூ.27,000க்கா?”.. புற்றுநோய் மருந்து விலையேற்றத்திற்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்!

கருத்து வேறுபாடு குறித்த புகார்கள்:

நாடு தழுவிய அளவில் நடைபெறும் எஸ்.ஐ.ஆர் எனும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்த நடவடிக்கைகளின் போது, புதிய வாக்காளர்களைச் சேர்க்கப் பயன்படும் படிவம்-6 தங்களுக்குத் தெரியாமல் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் குற்றம் சாட்டியதாகத் தகவல்கள் கசிந்தன. மேலும், வாக்காளர் பட்டியலின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு, தரவு மேலாண்மை மற்றும் பெயர் சேர்க்கை-நீக்கம் தொடர்பான முடிவுகளில் தங்களுக்கு எவ்விதத் தகவலும் தெரிவிக்கப்படுவதில்லை என்றும் அவர்கள் கூறியதாக அறியப்பட்டது.

அமைச்சரவைச் செயலாளருக்குக் கடிதம்?

கடந்த 10 மாதங்களில் 14 முறை இத்தகைய கொள்கை ரீதியான முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாகக் சுட்டிக்காட்டி, தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் மத்திய அமைச்சரவைச் செயலாளர் டி.வி. சோமநாதனுக்குக் கடிதம் எழுதியிருப்பதாகச் செய்திகள் வெளியாயின. அதில், தேர்தல் ஆணையத்தின் மென்பொருள் வடிவமைப்பு மற்றும் வாக்காளர் தரவுகளின் நம்பகத்தன்மை குறித்தும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளதாகக் கூறப்பட்டுத் தேசிய அளவில் விவாதத்தைக் கிளப்பியது.

இதையும் படிக்க: சோப்பு, ஷாம்பு, பற்பசையில் சைவம், அசைவம் குறிக்கும் அடையாளம் கட்டாயம்! மத்திய அரசின் புதிய விதிமுறை..

தேர்தல் ஆணைய அதிகாரிகளின் மறுப்பும் விளக்கமும்:

இந்தத் தகவல்கள் வைரலானதைத் தொடர்ந்து, தேர்தல் ஆணைய வட்டாரங்கள் உடனடியாக அதிகாரப்பூர்வ விளக்கத்தை அளித்துள்ளன. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோருக்கு இடையே எவ்விதமான பிளவோ அல்லது கருத்து வேறுபாடோ இல்லை என அதிகாரிகள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர். தற்போது நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் உள்பட ஆணையத்தின் அனைத்து முக்கியமான முடிவுகளும் மூன்று ஆணையர்களாலும் ஆலோசிக்கப்பட்டு ஒருமனதாகவே எடுக்கப்பட்டு வருகின்றன எனக் கூறப்பட்டது. ஆணையர்கள் தங்களுக்குள் ஆலோசனைகளையும் பல்வேறு பார்வைகளையும் பகிர்வது வழக்கம் என்றும், அதை உட்கட்சி மோதலாகவோ அல்லது கருத்து வேறுபாடாகவோ சித்தரிக்க முடியாது என்றும் தெளிவுபடுத்திப் பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

Follow Us