இன்று 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. சென்னையில் எப்படி? வானிலை நிலவரம்..
Rainfall Alert: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், பகல் நேரங்களில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படலாம். மாலை அல்லது இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 24, 2026: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பதிவாகி வரும் சூழலில், வெப்பநிலையின் தாக்கம் கணிசமாக குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிக`பட்சமாக பாளையங்கோட்டையில் 37.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதேபோல், மதுரையில் 37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரையில், நுங்கம்பாக்கத்தில் அதிகபட்சமாக 34.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், மீனம்பாக்கத்தில் 33.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது.
6 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை:
இதனிடையே, தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செப்டம்பர் 24-ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும் படிக்க: “ஜெம் வீரமணியால் எனது உயிருக்கு ஆபத்து” பகீர் கிளப்பிய உதவியாளர் சாந்தி.. வீடியோ வாக்குமூலம் வைரல்!
தொடர்ந்து, செப்டம்பர் 25 மற்றும் 26-ஆம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 27-ஆம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மட்டும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. அதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 29-ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெப்பநிலையில் மாற்றம் இருக்காது:
அதேநேரத்தில், தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது என்றும், தொடர்ந்து இயல்பை ஒட்டியே பதிவாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், பகல் நேரங்களில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படலாம். மாலை அல்லது இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: இடைத்தேர்தலில் த.வெ.க வேட்பாளர்கள் தோற்கடிக்கப்பட வேண்டும் – சி.பி.எம் சண்முகம்..
சென்னையைப் பொறுத்தவரையில் கடந்த இரண்டு நாட்களாக மாலை நேரங்களில் பல்வேறு பகுதிகளில் லேசான மழை பதிவாகி வருகிறது. அதேசமயம், வெப்பநிலையும் கணிசமாகக் குறைந்து காணப்படுவதால், நகரில் நிலவி வந்த உஷ்ணம் தணிந்து வருகிறது.