AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

இடைத்தேர்தலில் த.வெ.க வேட்பாளர்கள் தோற்கடிக்கப்பட வேண்டும் – சி.பி.எம் சண்முகம்..

Tamil Nadu By Election: இந்த இடைத்தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் மரகதம் குமரவேல் வெற்றி பெறக் கூடாது. அதேபோல், தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சத்தியபாமாவும் தோற்கடிக்கப்பட வேண்டும்” என சண்முகம் தெரிவித்தார்.

இடைத்தேர்தலில் த.வெ.க வேட்பாளர்கள் தோற்கடிக்கப்பட வேண்டும் – சி.பி.எம் சண்முகம்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 23 Sep 2026 22:10 PM IST

செப்டம்பர் 23, 2026: அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெற உள்ள இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்கள் வெற்றி பெறக் கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில் 7 சட்டமன்றத் தொகுதிகள் காலியாக உள்ளன. இதில் தற்போது மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 9-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இடைத்தேர்தலில் 5 முனைப்போட்டி:

இந்த நிலையில், இரு தொகுதிகளிலும் 5 முனைப் போட்டி நிலவி வருகிறது. தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் மற்றும் இடதுசாரிகள் ஆகிய கட்சிகள் தேர்தல் களத்தில் போட்டியிடுகின்றன. ஒவ்வொரு கட்சியினரும் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல், தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களும் இரு தொகுதிகளில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளனர்.

மேலும் படிக்க: தவெக அமைச்சர்கள் வங்கி கணக்கை ரகசியமாக கண்காணிக்கும் முதல்வர் விஜய்.. என்ன காரணம்.. என். ஆனந்த் விளக்கம்!

த.வெ.க வேட்பாளர்கள் தோற்கடிக்கப்பட வேண்டும்:

இந்த சூழலில், மதுராந்தகம் தொகுதி கருங்குழி பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சுகந்தியை ஆதரித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பொதுமக்களிடையே உரையாற்றிய அவர், இந்த இடைத்தேர்தல் குறித்து பல்வேறு கருத்துகளைத் தெரிவித்தார்.

அவர் பேசுகையில், “கடந்த பொதுத்தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் ராஜினாமா செய்துவிட்டு மாற்றுக் கட்சியில் சேர்ந்ததன் விளைவாகவே இந்த இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இது மக்கள்மீது திணிக்கப்பட்ட தேர்தல்” என்றார்.

மேலும் படிக்க: மின்வெட்டுக்கு புதிய தியரி.. விஞ்ஞானிகளையே விஞ்சிய தவெக அமைச்சர்கள்.. டி.டி.வி. தினகரன் மரண கலாய்!

சட்டமன்றம் சண்டை மன்றமாக இருக்கக்கூடாது:

மேலும், “இந்த இடைத்தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் மரகதம் குமரவேல் வெற்றி பெறக் கூடாது. அதேபோல், தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சத்தியபாமாவும் தோற்கடிக்கப்பட வேண்டும்” என சண்முகம் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “சட்டமன்றத்தை சட்டமன்றமாக நடத்த வேண்டும்; சண்டை மன்றமாக நடத்தக் கூடாது. இதனால் மக்களின் வரிப்பணம்தான் வீணாகிறது. எனவே, இந்தத் தேர்தலில் எப்பாடுபட்டாவது தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்கள் தோற்கடிக்கப்பட வேண்டும். அவர்கள் நிச்சயம் வெற்றி பெறக் கூடாது” எனக் குறிப்பிட்டார்.

Follow Us