AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சமையல் எண்ணெய் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை: இறக்குமதி வரி குறைப்பு.. முழு விவரம்..

Import Duty Cut For Edible Oils: பண்டிகைக் காலம் நெருங்கி வரும் நிலையில், சமையல் எண்ணெய்களின் விலையை கட்டுக்குள் வைத்திருக்கும் நோக்கில் பாமாயில், சோயாபீன் எண்ணெய் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் உள்ளிட்ட கச்சா மற்றும் சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய்களின் இறக்குமதிக்கான வரியை மத்திய அரசு குறைத்துள்ளது.

சமையல் எண்ணெய் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை: இறக்குமதி வரி குறைப்பு.. முழு விவரம்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 24 Sep 2026 11:44 AM IST

செப்டம்பர் 24, 2026: பண்டிகைக் காலம் நெருங்கி வரும் நிலையில், சமையல் எண்ணெய்களின் விலையை கட்டுக்குள் வைத்திருக்கும் நோக்கில் பாமாயில், சோயாபீன் எண்ணெய் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் உள்ளிட்ட கச்சா மற்றும் சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய்களின் இறக்குமதி வரியை மத்திய அரசு குறைத்துள்ளது.

இறக்குமதி வரி குறைப்பு:

அதன்படி, கச்சா சோயாபீன் எண்ணெய் மற்றும் கச்சா பாமாயிலுக்கான அடிப்படை சுங்க வரி 10 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. கச்சா சூரியகாந்தி எண்ணெய்க்கான இறக்குமதி வரி 10 சதவீதத்தில் இருந்து பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டுள்ளது.

அதேபோல், சுத்திகரிக்கப்பட்ட சோயாபீன் எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பாமாயிலுக்கான இறக்குமதி வரி 32.5 சதவீதத்தில் இருந்து 27.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. சுத்திகரிக்கப்பட்ட சூரியகாந்தி எண்ணெய்க்கான வரி 32.5 சதவீதத்தில் இருந்து 22.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

இன்று நள்ளிரவு முதல் அமல்:

இந்த புதிய வரி விகிதங்கள் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகின்றன. இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளதால், வெளிநாடுகளில் இருந்து சமையல் எண்ணெய்களை இறக்குமதி செய்வதற்கான செலவு குறையும். இந்த செலவுக் குறைப்பு விநியோகச் சங்கிலி முழுவதும் நுகர்வோரிடம் சென்றடைந்தால், சில்லறை விலையில் சமையல் எண்ணெய்களின் விலை குறைய வாய்ப்புள்ளது.

இந்தியாவின் உள்நாட்டு சமையல் எண்ணெய் தேவையில் கணிசமான பகுதி இறக்குமதி மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது. இதனால் சர்வதேச சந்தையில் நிலவும் சமையல் எண்ணெய்களின் விலை மற்றும் இறக்குமதி வரி ஆகியவை உள்நாட்டு சந்தையில் விலை நிர்ணயத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

மேலும் படிக்க: பயண நேரம் குறைகிறது.. இந்தியாவின் உள்கட்டமைப்பு எப்படி உங்கள் நேரத்தை சேமிக்கிறது?

பண்டிகைக் காலங்களில் சமையல் எண்ணெய்களுக்கான தேவை வழக்கமாக அதிகரிக்கும் நிலையில், விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இந்த வரிக் குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இறக்குமதி வரி குறைப்பின் முழுப் பலனும் நுகர்வோருக்கு கிடைக்குமா என்பது சந்தை நிலவரம் மற்றும் விநியோகச் சங்கிலியில் ஏற்படும் மாற்றங்களைப் பொறுத்தே அமையும்.

Follow Us