AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஓடும் ஏசி பேருந்தில் திடீர் தீ விபத்து.. உயிரைக் காப்பாற்ற அலறிய பயணிகள்.. 9 பேர் உடல் கருகி பரிதாபமாக பலி!!

Greater Noida Yamuna Expressway Bus Fire: உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா அருகே யமுனா எக்ஸ்பிரஸ்வே சாலையில் டெல்லியில் இருந்து மஹோபா நோக்கிச் சென்ற ஏசி ஸ்லீப்பர் பேருந்தில் அதிகாலை பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதில் 9 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர், மேலும் பலர் படுகாயமடைந்தனர். குளிரூட்டும் சாதனத்தில் ஏற்பட்ட வெடிப்பு அல்லது ஏசி ஷார்ட் சர்க்யூட்டே காரணம் என சந்தேகிக்கப்படுகிறது.

ஓடும் ஏசி பேருந்தில் திடீர் தீ விபத்து.. உயிரைக் காப்பாற்ற அலறிய பயணிகள்.. 9 பேர் உடல் கருகி பரிதாபமாக பலி!!
பேருந்தில் தீ விபத்து
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 24 Sep 2026 10:18 AM IST

உத்தரப் பிரதேச மாநிலத்தின் கிரேட்டர் நொய்டா அருகே அமைந்துள்ள அதிவேக யமுனா எக்ஸ்பிரஸ்வே நெடுஞ்சாலையில், டெல்லியில் இருந்து மஹோபா நோக்கிப் பயணித்த தனியார் ஏசி ஸ்லீப்பர் சுற்றுலாப் பேருந்தில் அதிகாலை நேரத்தில் திடீரெனப் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. பயணிகள் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த நேரத்தில் பேருந்தில் பரவிய அடர்ந்த புகையும் தீப்பற்றி எறிந்த தீப்பிழம்புகளும் அப்பகுதியை முற்றிலும் உலுக்கின. இந்த கொடூர சம்பவத்தில் ஒரு பெண் உட்பட 9 பயணிகள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்து அருகில் உள்ள மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிக்க: சூறாவளி காற்று.. ஆந்திரா அருகே கரையை கடந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. எத்தனை மாவட்டங்களில் மழை இருக்கும்?

தீ விபத்து நடந்த விதமும் பயணிகளின் சாட்சியமும்:

பீகார் மாநிலப் பதிவெண் கொண்ட இந்த இரட்டை அடுக்கு ஸ்லீப்பர் பேருந்தில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்துள்ளனர். அதிகாலை வேளையில் பேருந்தின் ஏசி பகுதியில் ஏற்பட்ட ஷார்ட் சர்க்யூட் அல்லது ஏசி வெடிப்பு காரணமாக தீ விபத்து தொடங்கியதாக முதற்கட்ட விசாரணையில் சந்தேகிக்கப்படுகிறது. விபத்தில் தப்பிய பயணி ஒருவர் கூறுகையில், “எல்லோரும் தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென சத்தம் கேட்டு விழித்துப் பார்த்தோம். பேருந்து முழுதும் அடர்ந்த புகை சூழ்ந்திருந்ததால் எதையும் பார்க்க முடியவில்லை. உடமைகளையோ காலணிகளையோ கூட எடுக்காமல் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஒருவரையொருவர் தள்ளியபடி அவசரமாக வெளியேற முயன்றோம்” என்று கைகலப்பு மற்றும் நெரிசலுடன் நடந்த துயரத்தை விவரித்தார்.

மீட்புப் பணிகளும் முதலமைச்சரின் உத்தரவும்:

விபத்து குறித்துத் தகவலறிந்ததும் தீயணைப்புப் படையினரும் உள்ளூர் காவல் துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயைக் கட்டுப்படுத்தி, பேருந்துக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். பேருந்தின் மேற்கூரையில் அளவுக்கு அதிகமான லக்கேஜ்கள் ஏற்றிச் செல்லப்பட்டதும் தீ வேகமாகப் பரவக் காரணமாக இருந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்தத் துயரச் சம்பவத்திற்கு உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறியுள்ள அவர், காயமடைந்த பயணிகளுக்குத் தேவையான அனைத்து மருத்துவ சிகிச்சைகளையும் விரைந்து வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிக்க: ஞானேஷ் குமாரை நீக்க வேண்டும்; 3 மாநிலங்களில் மறுதேர்தல் நடத்த வேண்டும்: உத்தவ் தாக்கரே

ஓட்டுநரின் அலட்சிய குற்றச்சாட்டு:

இதனிடையே, விபத்தில் தப்பிய பயணிகள் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர். விபத்துக்கு முன்பாகவே ஓட்டுநர் கேபினில் இருந்து புகை மற்றும் எரிச்சலூட்டும் வாசனை வந்ததாகவும், அது குறித்து பயணிகள் எச்சரித்தும் ஓட்டுநரும் நடத்துநரும் அதைப் பொருட்படுத்தாமல் அலட்சியமாக இருந்ததாகப் தப்பிய பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், பேருந்தின் எமர்ஜென்சி கதவுகள் மற்றும் தீயணைப்பு சாதனங்களின் இயக்கம் குறித்தும், பாதுகாப்பு விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்பட்டதா என்பது குறித்தும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow Us