AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

இரண்டாவது நாளாக குறைந்த தங்கம் விலை.. ரூ. 1,080 வரை சரிந்து விற்பனை..

Gold And Silver Rate: இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.135 குறைந்து ரூ.14,050-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் ஒரு சவரன் தங்கம் ரூ.1,080 குறைந்து ரூ.1,12,400-க்கு விற்பனையாகிறது. 24 கேரட் தூய தங்கம் ஒரு கிராம் ரூ.15,273-க்கும், ஒரு சவரன் ரூ.1,22,184-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இரண்டாவது நாளாக குறைந்த தங்கம் விலை.. ரூ. 1,080 வரை சரிந்து விற்பனை..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 24 Sep 2026 10:21 AM IST

செப்டம்பர் 26, 2026: சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று அதிரடியாக குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வரும் தங்கத்தின் விலை, சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப தொடர்ந்து மாற்றம் கண்டு வருகிறது.

கடந்த செப்டம்பர் 23ஆம் தேதி ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.14,185-க்கும், ஒரு சவரன் ரூ.1,13,480-க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி ஒரு கிராம் ரூ.255-க்கும், ஒரு கிலோ ரூ.2.55 லட்சத்துக்கும் விற்பனையானது.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்:

இந்த நிலையில், இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.135 குறைந்து ரூ.14,050-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் ஒரு சவரன் தங்கம் ரூ.1,080 குறைந்து ரூ.1,12,400-க்கு விற்பனையாகிறது. 24 கேரட் தூய தங்கம் ஒரு கிராம் ரூ.15,273-க்கும், ஒரு சவரன் ரூ.1,22,184-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.5 குறைந்து ரூ.250-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2.50 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் படிக்க: 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் சரிவை சந்தித்துள்ள வைரம்.. காரணம் என்ன?

தங்கம் விலை ஏற்ற இறக்கத்திற்கு என்ன காரண்ம்?

தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்திற்கு சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை, அமெரிக்க டாலரின் மதிப்பு, வட்டி விகிதம், பணவீக்கம், மத்திய வங்கிகளின் கொள்கை முடிவுகள் மற்றும் புவிசார் அரசியல் சூழல் உள்ளிட்ட பல காரணிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. குறிப்பாக, அமெரிக்காவில் வட்டி விகிதம் அதிகமாக இருக்கும் சூழலில், வட்டி வருவாய் தரும் முதலீடுகளின் மீதான ஆர்வம் அதிகரிப்பதால் தங்கத்தின் விலையில் அழுத்தம் ஏற்படலாம். சமீபத்திய சர்வதேச சந்தை நிலவரத்திலும், அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களை உயர்த்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பு தங்கத்தின் விலையை பாதித்துள்ளது.

இந்தியாவில் ஏன் இந்த மாற்றம்:

இந்தியாவைப் பொறுத்தவரை, ரூபாய்-டாலர் மாற்று விகிதமும் தங்கத்தின் உள்ளூர் விலையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை குறைந்தாலும், ரூபாயின் மதிப்பு சரிந்தால் இந்தியாவில் அதன் விலை குறைவது கட்டுப்படுத்தப்படலாம்.

தங்கத்தை முதலீடாக வாங்குபவர்கள், விலை குறையும் நேரங்களில் படிப்படியாக வாங்குவது, முதலீட்டு காலம் மற்றும் தங்களது நிதி தேவைகளை கருத்தில் கொள்வது போன்றவற்றை கவனிக்க வேண்டும். அதேநேரத்தில், தங்கம் விலை எப்போதும் ஒரே திசையில் நகராது என்பதால், குறுகிய கால விலை மாற்றங்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு முதலீட்டு முடிவுகளை எடுக்காமல் இருப்பது முக்கியம்.

Follow Us