ஊட்டியில் சாலையில் சென்ற பேருந்தின் சக்கரம் கழன்றதால் பரபரப்பு.. அடுத்து நடந்தது என்ன?
Ooty Bus Wheel Detaches on Highway | கன்னியாகுமரியில் இருந்து ஊட்டிக்கு சென்றுக்கொண்டு இருந்த அரசு பேருந்தின் சக்கரம் கழன்று ஓடிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நல் வாய்ப்பாக இந்த விபத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டு எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை.
ஊட்டி, செப்டம்பர் 26 : ஊட்டியில் (Ooty) சாலையில் சென்றுக்கொண்டு இருந்த பேருந்து ஒன்றின் முன்பக்க டயர் திடீரென கழன்று ஓடிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிர்ஷ்டவசமாக எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத நிலையில், பயணிகள் பாதுகாப்பாக உயிர் தப்பியுள்ளனர். இருப்பினும் இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், ஓடும் பேருந்தின் முன்பக்க சக்கரம் கழன்று ஓடிய பரபரப்பு சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஓடும் பேருந்தின் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு
கன்னியாகுமரியில் இருந்து 39 பயணிகளை ஏற்றிக்கொண்டு, நீலகிரி மாவட்டம், ஊட்டிக்கு அரசு பேருந்து ஒன்று சென்றுக்கொண்டு இருந்துள்ளது. இந்த பேருந்து குன்னூர் அருகே உள்ள பிளாக் பிரிட்ஜ் பகுதியில் சென்றுக்கொண்டு இருந்தபோது, திடீரென பேருந்தின் முன்பக்க டயர் கழன்று ஓடியுள்ளது. டயர் கழன்று ஓடியதன் காரணமாக அந்த பேருந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
இதையும் படிங்க : வடபழனி – பூந்தமல்லி ரயில் சேவை – ஒரே மேடையில் பிரதமர் மோடி – முதல்வர் விஜய்
நீண்ட தூரம் உரசியபடி சென்ற பேருந்து
சக்கரம் கழன்ற நிலையில், நிலை தடுமாறிய பேருந்து சாலை ஓரம் இருந்த மலையின் மீது நீண்ட தூரம் உரசியபடி சென்றுள்ளது. இதனால், பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் கடும் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்த நிலையில் தான், நிலவரம் குறித்து சுதாரித்துக்கொண்ட ஓட்டுநர், பிரேக் பிடித்து பேருந்தை நிறுத்தியுள்ளார். இதனால், பயணிகளுக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படாமல், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இதையும் படிங்க : மேடையில் அந்நியன்.. களத்தில் அம்பி.. முதல்வர் விஜய்யின் ஆட்சியை பங்கம் செய்த மு.க.ஸ்டாலின்!
கடும் அவதி அடைந்தனர்
பேருந்து பாதி வழியிலேயே நின்ற நிலையில், அதில் பயணம் செய்த பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். பின்னர் அவர்கள், அந்த வழியாக வந்த வேறு சில பேருந்துகளில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால், அந்த பகுதியில் சற்று போக்குவரத்து நெரிசல் மற்றும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
படத்தில் வரும் காட்சியை போன்ற சம்பவத்தை நேரில் கண்டதாக அந்த பேருந்தில் பயணம் செய்த பயணிகள் தங்களது திகைப்பூட்டும் அனுபவத்தை பகிர்ந்துள்ளனர்.