மேடையில் அந்நியன்.. களத்தில் அம்பி.. முதல்வர் விஜய்யின் ஆட்சியை பங்கம் செய்த மு.க.ஸ்டாலின்!
M. K. Stalin Responds CM Vijay Remarks : தேர்தலுக்கு முன் அந்நியன் போல பேசிவிட்டு தற்போது அம்பி போல பம்மி பதுங்குகிறீர்களே என்று முதல்வர் ஜோசப் விஜய்யை திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் கடுமையாக விமர்சித்து உள்ளார்.
மதுராந்தகத்தில் திமுக குறித்தும், அதன் தலைவர் மு. க. ஸ்டாலின் குறித்தும் முதல்வர் விஜய் ஆக்ரோஷமாக பேசியிருந்தார். இதற்கு திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது தள பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதிமுகவை சேர்ந்த மரகதம் குமரவேலை விலைக்கு வாங்கிக்கொண்டு தவெக தூய சக்தி.. திமுக தீய சக்தி என்று எப்படி கூச்சமே இல்லாமல் பேச முடிகிறது. வாக்களித்த மை காய்வதற்குள் அதிமுக கூட்டணியிலிருந்து எம்எல்ஏக்களை தூக்குவது தான் தூய சக்தியா. உங்கள் வேட்பாளர்கள் செல்லும் இடமெல்லாம் மக்கள் அளிக்கும் வரவேற்பை பார்த்தீர்களா. தவெகவிடம் எவ்வளவு பணம் வாங்குனீங்க என்று மக்கள் கேள்வி எழுப்பி விரட்டி அடித்து வருகின்றனர்.
எத்தனை முறை பாஜகவை எதிர்த்து பேசியுள்ளீர்கள்
சட்டமன்றத்தில் பாஜக என்று உங்கள் அமைச்சர் சொன்னாலே பதறி அடித்துக் கொண்டு அவை குறிப்பில் இருந்து நீக்குவது யார் என மக்களுக்கு தெரியும். கட்சி தொடங்கியது முதல் தற்போது வரை எத்தனை முறை பாஜகவை எதிர்த்து பேசி உள்ளீர்கள். எத்தனை போராட்டம் நடத்தி உள்ளீர்கள். திமுக மாதிரி வாக்குறுதிகளை அள்ளி வீசாமல் நடைமுறைக்கு சாத்தியமானதை வாக்குறுதியாக அளித்திருப்பதாக அந்நியன் மாதிரி பேசிவிட்டு, ஆட்சிக்கு வந்ததும் கஜானா காலி என அம்பி மோடில் பம்மி பதுங்கி கையே விரிக்கிறீர்களே, இதுதான் வாக்குறுதியை காப்பாற்றும் லட்சணமா.
மேலும் படிக்க: ஜெம் வீரமணி வழக்கில் அடுத்தடுத்து சரவெடி.. என்ட்ரி கொடுக்கும் அமலாக்கத்துறை? கலக்கத்தில் காவல்துறை அதிகாரிகள்!




வெற்றி மின் வெட்டு, வெற்றி அரிவாள் வெட்டு
திமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களே தவெக ஆட்சியில் நீட்சியாக உள்ளது. புதிய திட்டங்கள் என எதுவும் இல்லை. அப்படி கொண்டு வந்த திட்டங்கள் வெற்றி மின்வெட்டு, வெற்றி அரிவாள் வெட்டு, வெற்றி விலைவாசி உயர்வு, வெற்றி டெங்கு காய்ச்சல், வெற்றி பால் தட்டுப்பாடு திட்டங்கள் தான். பெண்களை திமுகவினர் அவதூறாக பேசுவதாக கூறிய நீங்கள் உங்கள் விருச்சுவல் அபியூசர்ஸ்களின் டிராக் ரெக்கார்டை எடுத்து பாருங்கள். ஜெம் வீரமணி விவகாரம் தொடர்பாக நான் ஏற்கனவே பேசிவிட்டேன்.
விஜய்யின் ஒட்டத்தில் அற்ப அரசியல் ஆதாயம் தேடவில்லை
இந்த வழக்கை அரசியல் ஆக்க கூடாது என்று உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியதை கூடவா உங்களது காதுகளில் அதிகாரிகள் ஓதவில்லை. கரூரில் 41 பேர் பலியானதை கூட கண்டுகொள்ளாமல் ஓடி ஒளிந்த உங்களைப் பற்றி எந்த தலைவரும், தன் தொண்டன் உயிரிழப்பதை விரும்ப மாட்டார் என்று தான் நான் கூறினேன். உங்கள் ஓட்டத்தை வைத்து அற்ப அரசியல் ஆதாயம் தேட நானோ, திமுகவோ முயலவில்லை. முதல்வர் பொறுப்புக்குரிய கண்ணியத்தோடு பேசுகிறோமா என்று சுய பரிசோதனை செய்யுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: முதல்வர் விஜய் பேசிய வார்த்தையால் சட்ட சிக்கல்? இதனை தவிர்த்திருக்கலாம்.. அரசியல் விமர்சகர்கள் கூறுவதென்ன!