AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

‘சூப்பர் எல்நினோ’ அச்சுறுத்தல்.. இந்தியாவில் 15,800 பேர் உயிரிழக்கும் அபாயம்.. திடுக்கிடும் எச்சரிக்கை!!

Super El Nino Threat: சூப்பர் எல்நினோ' தாக்கத்தால் அடுத்த 6 மாதங்களில் இந்தியாவில் சுமார் 15,800 பேர் உயிரிழக்க வாய்ப்புள்ளதாகச் சிக்காகோ பல்கலைக்கழக ஆய்வு எச்சரித்துள்ளது. தமிழ்நாட்டில் கடுமையான வெயில், வறட்சி மட்டுமின்றி, சென்னை போன்ற கடலோரப் பகுதிகளில் வரலாறு காணாத கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கு போன்ற இருவேறு தீவிரப் பாதிப்புகள் ஏற்படக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

‘சூப்பர் எல்நினோ’ அச்சுறுத்தல்.. இந்தியாவில் 15,800 பேர் உயிரிழக்கும் அபாயம்.. திடுக்கிடும் எச்சரிக்கை!!
'எல்நினோ' எச்சரிக்கை
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 26 Sep 2026 10:00 AM IST

பூமி எதிர்கொண்டு வரும் மிக முக்கியமான காலநிலை மாற்ற பிரச்சினைகளில் ‘எல்நினோ’ என்ற இயற்கை நிகழ்வு சாமானிய மக்களும் அறிந்த ஒன்றாக மாறியுள்ளது. பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு நீர் இயல்புக்கு மாறாக அதிக வெப்பமடைவதால் ஏற்படும் இந்த மாறுபாடு, உலகளாவிய வானிலை அமைப்பையே சீர்குலைத்து கடுமையான வெப்ப அலைகள், வறட்சி மற்றும் எதிர்பாராத புயல்-வெள்ள பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இந்த நிலையில், தற்போது உருவாகியுள்ள ‘சூப்பர் எல்நினோ’ காரணமாக உலகளவில் பெரும் மனித உயிரிழப்புகள் ஏற்படும் என்ற அதிர்ச்சித் தகவலை அமெரிக்காவின் புகழ்பெற்ற சிக்காகோ பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள புதிய ஆய்வு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

இதையும் படிக்க: வேகமாக வறண்டு வரும் தென்னிந்தியா – கடும் வறட்சியை நோக்கி தமிழ்நாடு – ஆய்வில் அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் 15,800 உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்பு:

சிக்காகோ பல்கலைக்கழகத்தின் ஆய்வறிக்கையின்படி, இந்த முறை உருவாகியுள்ள தீவிர சூப்பர் எல்நினோ தாக்கத்தால் அடுத்த 6 மாத காலத்திற்குள் உலகம் முழுவதும் சுமார் 4,51,000 பேர் உயிரிழக்கக் கூடும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக இந்தியாவில் மட்டும் 15,800 உயிரிழப்புகள் பதிவாக வாய்ப்புள்ளதாக அந்த ஆய்வு எச்சரித்துள்ளது. வழக்கமாக எல்நினோ காலங்களில் இந்தியாவின் பல மாநிலங்களில் கடுமையான வறட்சியும், தாங்க முடியாத வெப்ப அலையும் நிலவும் என்ற போதிலும், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இது மிகவும் விசித்திரமான மற்றும் தீவிரமான இருவேறு உச்சக்கட்ட பாதிப்புகளைக் கொடுக்கும் என்று வானிலை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழ்நாட்டிற்கு இரட்டை ஆபத்து:

வரலாற்று ரீதியாகப் பார்க்கும்போது, கடந்த 2015 மற்றும் 2023 ஆகிய எல்நினோ ஆண்டுகளில் சென்னை நகரம் மிகக் கடுமையான புயல் மற்றும் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளத்தைச் சந்தித்தது. அதேபோன்று 2016-ஆம் ஆண்டில் வரலாறு காணாத வறட்சியையும் தமிழ்நாடு எதிர்கொண்டது. இதனால், தற்போதைய சூப்பர் எல்நினோ காலத்தில் ஒரே நேரத்தில் வழக்கத்திற்கு மாறான அதிதீவிரக் கனமழை, புயல், வெள்ளப் பெருக்கு ஒருபுறமும், மறுபுறம் கடுமையான வெயில், வெப்ப அலை மற்றும் வறட்சி என இரட்டை உச்சக்கட்டப் பாதிப்புகளைத் தமிழ்நாடு சந்திக்க நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : “திமுக ஆட்சியில் ஏன் உரிய விசாரணை நடத்தவில்லை?”.. ஜெம் வீரமணி வழக்கில் சிபிஎம் சண்முகம் சரமாரி கேள்வி!

தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:

சூப்பர் எல்நினோவின் ஆபத்தில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள பொதுமக்கள் அதிகளவில் குடிநீர் அருந்துவது, உச்சி வெயில் நேரங்களில் அத்தியாவசியமின்றி வெளியில் செல்வதைத் தவிர்ப்பது போன்ற சுய பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுவது அவசியமாகும். இத்தகைய தீவிர காலநிலை மாற்றங்களை எதிர்கொள்ளத் தமிழக அரசு சார்பில் ‘எல்நினோ சிறப்பு வல்லுநர் குழு’ அமைக்கப்பட்டு நிலைமை தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. பள்ளிகளில் வெயில் பாதுகாப்பு வழிமுறைகள், அணைகளின் பராமரிப்பு, மழைநீர் வடிகால் பணிகளை முடுக்கி விடுதல் மற்றும் புயல்-வெள்ள முன்னெச்சரிக்கை அமைப்புகளைப் பலப்படுத்துதல் போன்ற பணிகளை முடுக்கிவிட்டு அரசு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது.

Follow Us