AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Gold Price : மீண்டும் சரிந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

Gold Silver Price On 26th September | சென்னையில் நாளுக்கு நாள் தங்கம் விலை மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில், தங்கம் விலை குறைந்துள்ள நிலையில், வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

Gold Price : மீண்டும் சரிந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 26 Sep 2026 10:50 AM IST

சென்னை, செப்டமர் 26 : சென்னையில் தங்கம் விலை (Gold Price) நாளுக்கு நாள் மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. நேற்று (செப்டம்பர் 25, 2026),  4 நாட்களுக்கு பிறகு தங்கம் விலை உயர்ந்த நிலையில், இன்று மீண்டும் தங்கம் விலை சரிந்துள்ளது. ஆனால், வெள்ளி விலையில் (Silver Price) எந்தவித மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மட்டும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

நிலையற்ற தன்மை – மீண்டும் சரிந்த தங்கம் விலை

2026 ஆம் ஆண்டு தங்கம் விலை நிலையற்ற தன்மையை கொண்டுள்ளது. குறிப்பாக ஒரு நாள் உயர்வை சந்திக்கும் தங்கம், மறு நாள் கடும் சரிவை சந்திக்கிறது. புவிசார் பதற்றம், பங்குச்சந்தை, தங்கத்திற்கான தேவை மற்று இருப்பு என பல காரணிகள் தங்கம் விலையை தீர்மானிக்கின்றன. இதன் காரணமாக ஒரு நாள் சரிவை சந்திக்கும் தங்கம், மறுநாள் உயர்வை சந்திக்கிறது. அந்த வகையில் தான், நான்கு நாட்களுக்கு பிறகு நேற்று (செப்டம்பர் 25, 2026) உயர்வை சந்தித்த தங்கம், இன்று (செப்டம்பர் 26, 2026) சரிவை சந்தித்துள்ளது.

இதையும் படிங்க : கடனை அடைக்க புதிய கடன் வாங்கும் 40% இந்தியர்கள்.. ஷாக் ரிபோர்ட்!

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.14,000-க்கும், சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.1,12,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதுவே 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.11 குறைந்து ஒரு கிராம் ரூ.15,273-க்கும், சவரனுக்கு ரூ.88 குறைந்து ஒரு சவரன் ரூ.1,22,184-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.250-க்கும், ஒரு கிலோ ரூ.2,50,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க : கிழிந்த ரூபாய் நோட்டுக்களை மாற்ற முடியுமா?.. ஆர்பிஐ விதிகள் கூறுவது என்ன?

தங்கம் விலை ஒவ்வொரு நாளும் இத்தகைய மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில், தங்கம் விலையில் முதலீடு செய்யலாமா, வேண்டாமா என பொதுமக்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். ஆனால், தங்கம் விலை ஆண்டின் இறுதியில் விலை உயர்வை சந்திக்கும் என்றும், நீண்ட நாட்களை கருத்தில் கொண்டு முதலீடு செய்ய நினைக்கும் நபர்கள் தாராளமாக தங்கத்தில் முதலீடு செய்யலாம் என பொருளாதார வல்லுநர்கள் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us