AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

வேகமாக வறண்டு வரும் தென்னிந்தியா – கடும் வறட்சியை நோக்கி தமிழ்நாடு – ஆய்வில் அதிர்ச்சி தகவல்

Tamil Nadu Drought Risk : இந்தியாவில் கடந்த 52 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றங்கள் குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், தென்னிந்தியா வேகமாக வறண்டு வரும் பகுதியாக இருப்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக, தமிழ்நாடு நாட்டின் மிகக் கடுமையான வறட்சி பாதிப்புக்குள்ளாகும் மாநிலங்களில் ஒன்றாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வேகமாக வறண்டு வரும் தென்னிந்தியா – கடும் வறட்சியை நோக்கி தமிழ்நாடு  – ஆய்வில் அதிர்ச்சி தகவல்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 25 Sep 2026 16:03 PM IST

சென்னை, செப்டம்பர் 25 : இந்தியாவில் கடந்த 52 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றங்கள் குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், தென்னிந்தியா வேகமாக வறண்டு வரும் பகுதியாக இருப்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக, தமிழ்நாடு நாட்டின் மிகக் கடுமையான வறட்சி பாதிப்புக்குள்ளாகும் மாநிலங்களில் ஒன்றாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. எவால்யூசன் ஆஃப் கிளைமேட் எக்ஸ்ட்ரீம்ஸ் ஓவர் தி இந்தியன் சப்கான்டினென்ட் என்ற தலைப்பில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு இன்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் கிளைமேட்டாலஜி இதழில் வெளியாகியுள்ளது.

கடும் வறட்சியில் தமிழ்நாடு

அதில் வெளியான தகவலின்படி கடந்த 1971 ஆம் ஆண்டு முதல் 2022 வரையிலான வானிலைத் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவின் மற்ற பகுதிகளுடன் ஒப்பிடும்போது தென்னிந்தியாவில் வறட்சி வேகமாக அதிகரித்து வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க : தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கு.. சிபிஐ அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.. நீதிமன்றம் அதிரடி!!

மேலும் கடந்த 2000 ஆம் ஆண்டுக்குப் பிறகு, தென்னிந்தியாவின் 40 சதவிகிதத்துக்கும் அதிகமான நிலப்பரப்பு வறட்சியால் பாதிக்கப்பட்டிருந்ததாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் ஒடிசா உள்ளிட்ட மாநிலங்கள் அதிக வறட்சி பாதிப்பை எதிர்கொள்ளும் பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. மேலும், 1980களுடன் ஒப்பிடும்போது 2011 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இந்த மாநிலங்களில் வறட்சியால் ஏற்பட்ட பாதிப்பு 20 முதல் 30 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது.

இந்திய வானிலை ஆய்வு மையம் மற்றும் வானிலை ஆய்வாளர்கள் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர். அதன் படி பகல் நேர வெப்பநிலை, ஈரப்பதம், வெப்ப அலையின் தீவிரம், வறட்சி உள்ளிட்ட 7 முக்கிய காலநிலை அபாயங்கள் ஆய்வில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. இதற்காக 1971 முதல் 2022 வரையிலான இந்திய வானிலை ஆய்வு மையத்தின் மழைப்பொழிவு மற்றும் வெப்பநிலை தரவுகள் ஆய்வு செய்யப்பட்டன.

இந்த நிலையில் இந்த ஆய்வின் இணை ஆசிரியரான டாக்டர் எம். ராஜீவன், தென்னிந்தியாவில் வறட்சிக்கான அறிகுறிகள் மிகவும் தெளிவாக காணப்படுவதாக தெரிவித்துள்ளார். குறிப்பாக இந்தியாவின் கிழக்குக் கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் வறட்சியின் தாக்கம் அதிகமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் கடந்த 50 ஆண்டுகளில் தென்னிந்தியாவில் வறட்சி மற்ற காலநிலை அபாயங்களைக் காட்டிலும் அதிகமாக தீவிரமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க : “திமுக ஆட்சியில் ஏன் உரிய விசாரணை நடத்தவில்லை?”.. ஜெம் வீரமணி வழக்கில் சிபிஎம் சண்முகம் சரமாரி கேள்வி!

தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் வறட்சியை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என ஆய்வு பரிந்துரைக்கிறது. விவசாயம், நீர் மேலாண்மை, சுகாதாரம் மற்றும் உள்கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து செயல்பட வேண்டிய அவசியத்தையும் ஆய்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Follow Us