AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

வண்டலூர் அரசுப் பள்ளி கழிவறையில் 10-ஆம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடூரம்.. கொதித்தெழுந்த பெற்றோர்.. சாலையில் இறங்கி மறியல்!!

Vandalur Government School Student Assault: வண்டலூர் அருகே அரசுப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு பயிலும் மாணவிக்குக் கழிவறையில் பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி நிர்வாகத்தின் அலட்சியத்தையும், தகவலை மறைக்க முயன்ற போலீசாரையும் கண்டித்துப் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சாலை மறியல் மற்றும் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வண்டலூர் அரசுப் பள்ளி கழிவறையில் 10-ஆம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடூரம்.. கொதித்தெழுந்த பெற்றோர்.. சாலையில் இறங்கி மறியல்!!
மாதிரிப் படம்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 25 Sep 2026 12:46 PM IST

செங்கல்பட்டு, செப்.25: தமிழ்நாட்டில் கல்வி நிறுவனங்களுக்குள்ளேயே மாணவிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வரும் சம்பவங்கள் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில், செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே உள்ள அரசுப் பள்ளியொன்றில் 10-ஆம் வகுப்பு பயிலும் மாணவிக்கு, பள்ளிக் கழிவறையிலேயே மர்மக் கும்பலால் கொடூரமான முறையில் பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்தக் கேளம்பாக்கம் மற்றும் வண்டலூர் பகுதியையே உலுக்கியுள்ளது. மாணவர்கள் பயிலும் பாதுகாப்பான இடமாகக் கருதப்படும் பள்ளி வளாகத்திற்குள்ளேயே ஊடுருவி, மாணவியை மயக்கமடையச் செய்து இத்தகைய கொடூரச் செயலை மர்ம நபர்கள் செய்திருப்பது, கல்வித் துறை மற்றும் காவல்துறையின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தக் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது.

இதையும் படிக்க: சென்னையில் இரவில் அலரல் சத்தம்.. நடுரோட்டில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. மாணவர் உள்பட மூவரின் வக்கிர செயல்!

பள்ளி உள்கட்டமைப்பு குறைபாடு:

சம்பவத்தன்று பள்ளியில் வழக்கம்போல் வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், கழிவறைக்குச் சென்ற 10-ஆம் வகுப்பு மாணவி வெகு நேரமாகியும் வகுப்பறைக்குத் திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த சக மாணவிகள் கழிவறைப் பகுதிக்குச் சென்று பார்த்தபோது, அந்த மாணவி மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். உடனடி மீட்ப நடவடிக்கையாக அம்மாணவி மீட்கப்பட்டுத் தாகூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பள்ளியின் பின்பகுதியில் சுவர் சரியாக அமைக்கப்படாமல், ஏரிக்கரையிலிருந்து எளிதில் குதித்து உள்ளே வரும் வகையில் புதர் மண்டிய அமைப்பில் கழிவறைகள் அமைக்கப்பட்டிருப்பதே இத்தகைய அசம்பாவிதம் நேரக் காரணம் எனப் பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பள்ளி நிர்வாகத்தின் அலட்சியம்:

இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்தும் பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் எந்தவித விளக்கமும் அளிக்காமல் அலட்சியமாகச் செயல்பட்டதாகப் பெற்றோர்கள் கொதிப்படைந்துள்ளனர். மேலும், பள்ளிக்கு அவப்பெயர் ஏற்பட்டுவிடும் என்ற காரணத்தைக் கூறி இச்சம்பவத்தை மூடி மறைக்கப் பள்ளி நிர்வாகம் முயன்றதாகவும், அப்பகுதியில் அரசியல் ரீதியிலான நிகழ்வுகள் நடைபெறுவதைக் காரணம் காட்டி காவல்துறையினரும் வழக்கைக் தீவிரமாக விசாரிக்காமல் மறைக்கப் பார்த்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இத்தகைய அலட்சியப் போக்கு, பெண் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் பீதியை உருவாக்கியுள்ளது.

இதையும் படிக்க: நிர்வாண கோலத்தில் ஜெம் வீரமணி? சிறுமியுடன் உல்லாசமாக இருந்த ரகசிய காட்சிகள் கசிவு.. வழக்கில் அடுத்தக்கட்ட பரபரப்பு!

சாலை மறியல், கொந்தளித்த பெற்றோர்கள்:

பள்ளி நிர்வாகம் மற்றும் காவல்துறையின் மெத்தனப் போக்கைக் கண்டித்துப் பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு பள்ளி வளாகத்தை முற்றுகையிட்டனர். தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், குற்றவாளிகளைக் உடனடியாகக் கைது செய்து தங்கள் கண் முன்னே நிறுத்த வேண்டும் என்றும், பள்ளிக்கூடத்திற்கு அருகே இயங்கி வரும் மதுபானக் கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் முழக்கமிட்டனர். மாணவியின் பெற்றோரிடம் அதிகாரிகள் நேரில் வந்து தங்களுக்கு உண்மை நிலையை விளக்கும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என உறுதியாகத் தெரிவித்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

Follow Us