நிர்வாண கோலத்தில் ஜெம் வீரமணி? சிறுமியுடன் உல்லாசமாக இருந்த ரகசிய காட்சிகள் கசிவு.. வழக்கில் அடுத்தக்கட்ட பரபரப்பு!
Gem Veeramani Leaked Footage : ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணி சிறுமிகளுடன் உல்லாசமாக இருந்த வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது சைதாப்பேட்டை பங்களாவில் பொருத்தப்பட்டிருந்த ரகசிய கேமராவில் பதிவு செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் பிரபல தொழிலதிபரான ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணி 18 வயதுக்கு உட்பட்ட பல்வேறு சிறுமைகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்த நிலையில் அவரை மத்திய குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர். இவருக்கு உடந்தையாக இருந்ததாக அவரது உதவியாளர் சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்மன், மற்றொரு உதவியாளர் கணேசன் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மட்டும் இன்றி இந்த வழக்கில் பல்வேறு அரசு உயர் அதிகாரிகளும் சம்பந்தப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், ஜெம் வீரமணி ஒரு சிறுமையுடன் நிர்வாண கோலத்தில் இருக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோக்கள் தேனாம்பேட்டையில் உள்ள பங்களாவில் வீரமணி, ஒரு சிறுமியுடன் உல்லாசமாக இருந்த போது எடுக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. இந்த வீடியோ காட்சிகள் தற்போது இந்த வழக்கில் பரபரப்பை மேலும் அதிகரித்துள்ளது.
சிறுமியுடன் வீரமணி உல்லாசமாக இருந்த வீடியோ
ஏற்கனவே, கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜெம் வீரமணி தொடர்புடைய வீடுகள் மற்றும் அலுவலகங்களில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டிருந்தனர். இதில், கைப்பற்றப்பட்ட செல்போன்கள் மற்றும் டிஜிட்டல் ஆவணங்களிலும், அவரது உதவியாளர் சாந்தி உள்ளிட்டோரின் செல்போன்களில் ஜெம் வீரமணி சிறுமிகளுடன் தனிமையில் இருந்த வீடியோ காட்சிகளை போலீசார் பறிமுதல் செய்திருந்தனர். இந்த நிலையில், மற்றொரு புதிய வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.
மேலும் படிக்க: 2 காவல் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்.. ஜெம் வீரமணி வழக்கு காரணமா?




ரகசிய கேமரா காட்சிகள் சேமித்த பென் டிரைவ்கள்
இது மட்டும் இன்றி, சாந்தியின் வீட்டில் ரகசியமாக பொருத்தப்பட்டிருந்த கேமராக்களில் பதிவான காட்சிகள் பென் டிரைவ்களில் சேமித்து வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. அந்த பென் டிரைவ்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த வீடியோக்களின் அடிப்படையில், ஜெம் வீரமணியை மிரட்டி பணம் பறிக்க அரசியல் பிரமுகர்களை சாந்தி உள்ளிட்டோர் அனுகியதாகவும் கூறப்படுகிறது. இதில், ரூ. 10 கோடி பெறப்பட்ட நிலையில் சாந்திக்கு ரூ. 2 கோடி மட்டும் கொடுத்ததால் வீடியோ ஆதாரங்களை போலீசாரிடம் அவர் கொடுத்ததாக தகவல்கள் கூறுகின்றன.
ரூ. 70 கோடி ரொக்கம் கை மாறியது குறித்து விசாரணை
இதனிடையே, மூடி மறைப்பதற்காக ரூ. 70 கோடி ரொக்கம் போலீசாருக்கு கை மாறியதாகவும், கையில் நடவடிக்கையில் இருந்து தப்பிப்பதற்காக நிலத்தை விற்று காவல் அதிகாரிகளுக்கு ரூ. 60 கோடி கொடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த வழக்கு பூதாகராம் ஆன நிலையில் ஐபிஎஸ் அதிகாரிகள் அருண் மற்றும் கண்ணன் மற்றும் உதவி ஆணையர் யாஸ்மின் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் படிக்க: ஜெம் வீரமணி பாலியல் வழக்கை திசை திருப்பும் முயற்சியில் சிலர்.. காங்கிரஸ் பட்டியலின தலைவர் பகீர் வாக்குமூலம்!