AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஜெம் வீரமணி பாலியல் வழக்கை திசை திருப்பும் முயற்சியில் சிலர்.. காங்கிரஸ் பட்டியலின தலைவர் பகீர் வாக்குமூலம்!

Congress Ranjan Kumar Latest Speech : ஜெம் வீரமணி மீதான பாலியல் புகார் அளிக்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து காங்கிரஸ் கட்சியின் பட்டியல் இன தலைவர் ரஞ்சன் குமார் பரபரப்பு பேட்டி அளித்து உள்ளார். அதை விரிவாக பார்க்கலாம்.

ஜெம் வீரமணி பாலியல் வழக்கை திசை திருப்பும் முயற்சியில் சிலர்.. காங்கிரஸ் பட்டியலின தலைவர் பகீர் வாக்குமூலம்!
ஜெம் வீரமணி- ரஞ்சன் குமார்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 24 Sep 2026 19:45 PM IST

தமிழகத்தில் பல்வேறு சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணி மீதான பாலியல் வழக்கு விவகாரம் பூதாகரமாகி உள்ளது. இது தொடர்பாக, மத்திய குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பட்டியல் இன தலைவர் ரஞ்சன் குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜெம் வீரமணி மீதான பாலியல் புகார் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தலைமையிடம் ஆலோசனை மேற்கொண்டு அவர்கள் அறிவுறுத்தலின் அடிப்படையில் நடக்கலாம் என்று முடிவு செய்து இருந்தேன். ஆனால், கடந்த சில நாட்களாக யூடியூப்புகளில் இந்த வழக்கை திசை திருப்பும் வகையில் தவறான செய்திகளை பதிவிட்டு வந்தனர். அப்போது, ஒரு தனியார் செய்தி நிறுவனத்தை சேர்ந்த நிருபர் என்னிடம் இந்த வழக்கு திசை மாறி செல்லும் நிலை உள்ளது. எனவே, நீங்கள் உங்களிடம் உள்ள ஆதாரங்களை வெளியிட்டு பேச வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

2024- ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் அளித்த புகார்

அதன் அடிப்படையில் என்னிடம் இருந்த ஆதாரங்கள், புகார்கள், வாட்ஸ் ஆப் மெசேஜ்கள் ஆகியவற்றை தனியார் செய்தி அலுவலகத்திற்கு நேரடியாக சென்று சமர்ப்பித்தேன். அதன் பின்னரே இந்த வழக்கு தொடர்பான விவரங்கள் வெளியாக தொடங்கின. தற்போது, எனது கட்சி தலைமையிடம் கலந்து ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கைகளில் செயல்பட உள்ளேன். கடந்த 2024- ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் இது தொடர்பாக புகார் அளித்திருந்தேன்.

மேலும் படிக்க: ஜெம் வீரமணி பாலியல் வழக்கு.. 3 காவல் அதிகாரிகளுக்கு சம்மன்.. மேலும் புதிய ஆபாச வீடியோக்கள்? அடுத்தடுத்து அதிர்ச்சி!

எனது புகாரை போலீசார் முறையாக விசாரிக்கவில்லை

ஆனால், எனது புகாரை போலீசார் எடுக்கவில்லை. தற்போது, தமிழக மக்கள் எந்த நம்பிக்கையின் அடிப்படையில் விஜயை முதல்வராக அமர வைத்தார்களோ, அதன் அடிப்படையில் முதல்வர் விஜய் இது தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக காவல்துறை மற்றும் அரசு எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் நான் வர தயாராக உள்ளேன். ஒத்துழைப்பு வழங்கவும் தயாராக இருக்கிறேன்.

வழக்கில் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்

வீரமணி வழக்கில் கைதான சாந்தி அவரது கணவர் ஆகியோரிடம் போலீசார் வாக்குமூலம் பெற்றுள்ளனர். அதில், யார் பணம் வாங்கினார்கள் உள்பட அனைத்து விவரங்களும் போலீசாருக்கு தெரிந்திருக்கும். இந்த வழக்கை நீர்த்துப்போக செய்யும் வகையில் சிலர் செயல்படுவதால் இந்த விவகாரத்தை வெளிக்கொண்டு வந்து உள்ளேன். இதில் தவறு செய்தவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும். இதற்காக நான் துணை நிற்பேன் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க: 2 காவல் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்.. ஜெம் வீரமணி வழக்கு காரணமா?

Follow Us