AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கு.. சிபிஐ அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.. நீதிமன்றம் அதிரடி!!

Thoothukudi Sterlite Firing Case: தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு வழக்கில் சிபிஐ அதிகாரிகள் மீது சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை முறையாக நடைபெறவில்லை என வழக்கறிஞர் கண்ணன் தாக்கல் செய்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கை வரும் திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கு.. சிபிஐ அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.. நீதிமன்றம் அதிரடி!!
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 25 Sep 2026 13:54 PM IST

மதுரை, செப்.25: தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் கடந்த 2018-ஆம் ஆண்டு தீவிரப் போராட்டங்களில் ஈடுபட்டனர். போராட்டத்தின் 100-வது நாளில் நடைபெற்ற பேரணியின் போது, தமிழக காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 அப்பாவி பொதுமக்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தானாக முன்வந்து வழக்கைப் பதிவு செய்து, விசாரணையை மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட்டது.

இதையும் படிக்க: “சிங்கப்பெண் படை எங்கே?”.. வண்டலூர் பள்ளி மாணவி விவகாரத்தில் கொதித்தெழுந்த உதயநிதி ஸ்டாலின்!!

குற்றப்பத்திரிகையும் அதிருப்தியும்:

இவ்வழக்கை விசாரணை செய்த சிபிஐ, நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் ஒரே ஒரு காவல் ஆய்வாளரை மட்டுமே குற்றவாளியாகச் சேர்த்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. துப்பாக்கிச் சூட்டிற்கு காரணமான உயர் அதிகாரிகள் மற்றும் பிற காவலர்கள் மீது முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படாமல், ஒரே ஒரு ஆய்வாளர் மீது மட்டும் குற்றம் சாட்டப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சிபிஐ-யின் இந்த அரைகுறை விசாரணை குறித்து சட்டப் வல்லுநர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தரப்பில் தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தன.

அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை:

முன்னதாக, இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம், அப்போதைய மாவட்ட ஆட்சியர், தென் மண்டல ஐஜி, டிஐஜி மற்றும் எஸ்பி உள்ளிட்ட உயர் காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் 13 பேர் மீது கடுமையான குற்றவியல் மற்றும் துறைரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்திருந்தது. இருப்பினும், இந்த உயர்மட்ட அதிகாரிகள் யாரையுமே சிபிஐ தனது குற்றப்பத்திரிகையில் சேர்க்கவில்லை என்ற குற்றச்சாட்டு வலுப்பெற்றது. மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்குவது மற்றும் குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகள் மீதான துறைரீதியான நடவடிக்கைகளை திரும்பப் பெறுவது தொடர்பாகவும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.

இதையும் படிக்க: வண்டலூர் அரசுப் பள்ளி கழிவறையில் 10-ஆம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடூரம்.. கொதித்தெழுந்த பெற்றோர்.. சாலையில் இறங்கி மறியல்!!

நீதிமன்ற அவமதிப்பு மனுவும் நீதிமன்ற உத்தரவும்:

இந்த நிலையில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன் மற்றும் சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு இவ்வழக்கை கடந்த ஒரு மாத காலமாகத் தொடர்ந்து விசாரணை செய்து வருகிறது. வழக்கின் விசாரணையின் போது, சிபிஐ அதிகாரிகள் இந்த வழக்கில் உரிய விசாரணையை நடத்தவில்லை என்றும், வழக்கை நீர்த்துப்போகச் செய்யும் வகையில் செயல்பட்டுள்ளனர் என்றும் கூறி வழக்கறிஞர் கண்ணன் என்பவர் நீதிமன்ற அவமதிப்பு மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வரும் திங்கள்கிழமை அன்று இப்போதைய பிரதான வழக்குடன் சேர்த்து நீதிமன்ற அவமதிப்பு மனுவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனக் கூறி வழக்கை ஒத்திவைத்துள்ளனர்.

Follow Us