AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஜெம் வீரமணி வழக்கு.. பெண் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு.. டிஜிபி அதிரடி உத்தரவு!!

Gem Veeramani POCSO Case: ஜெம் கிரானைட்ஸ் அதிபர் வீரமணி தொடர்பான போக்ஸோ வழக்கை விசாரிக்க பெண் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்து டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். அருண் ஐபிஎஸ் உள்ளிட்ட உயராதிகாரிகள் மாற்றப்பட்ட நிலையில், ஏடிஜிபி தேன்மொழி தலைமையிலான குழுவினர் வழக்கு விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

ஜெம் வீரமணி வழக்கு.. பெண் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு.. டிஜிபி அதிரடி உத்தரவு!!
டிஜிபி மகேஷ் குமார் அகர்வால்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 25 Sep 2026 11:15 AM IST

சென்னை, செப்.25: தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள ஜெம் குழும நிறுவனங்களின் தலைவர் வீரமணி மற்றும் அவரது கூட்டாளிகள் சம்பந்தப்பட்ட போக்ஸோ வழக்கு விசாரணை தற்போது அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், தொழிலதிபர் வீரமணி மற்றும் அவரது கூட்டாளிகள் உட்பட மொத்தம் நான்கு நபர்கள் காவல்துறை விசாரணைக்குப் பிறகு கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் ஆரம்பகட்ட விசாரணையின் போது உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியதாக சென்னை முன்னாள் மாநகர காவல் ஆணையர் அருண் ஐபிஎஸ், ஐஜி கண்ணன் உள்ளிட்ட உயர் காவல் அதிகாரிகள் ஏற்கனவே காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டு அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இவ்வழக்கை மேலும் நேர்மையாகவும் விரைவாகவும் விசாரிக்க தமிழ்நாடு காவல்துறைத் தலைமை அலுவலகம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதையும் படிக்க: ஜெம் வீரமணி வழக்கு.. சாந்தி, மகேந்திர சிம்மனிடம் விடிய விடிய போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை!

சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு:

இந்த போக்ஸோ வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் சிறுமிகள் என்பதையும், வழக்கின் தீவிரத்தன்மையையும் கருத்தில் கொண்டு, வழக்கை விசாரிக்க பெண் காவல் அதிகாரிகளை மட்டுமே உள்ளடக்கிய சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து சட்டம் ஒழுங்கு டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். இந்த சிறப்பு குழுவிற்குச் சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் காவல் ஆணையராகப் பணியாற்றும் ஏடிஜிபி தேன்மொழி தலைமை தாங்குகிறார். மேலும், இணை காவல் ஆணையர் திஷா மிட்டல், காவல் கண்காணிப்பாளர்கள் முத்தரசி மற்றும் கீதாஞ்சலி ஆகிய திறமைமிக்க பெண் அதிகாரிகள் இக்குழுவில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

விசாரணை, தனிப்படைகளின் திட்டமிடல்:

ஏற்கனவே இந்த வழக்கு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணை ஆவணங்கள், வாக்குமூலங்கள் மற்றும் இதுவரை திரட்டப்பட்ட ஆதாரங்கள் அனைத்தையும் டிஜிபி உத்தரவின் பேரில் இந்த சிறப்பு புலனாய்வு குழுவினர் முறைப்படி பெற்று ஆய்வைத் தொடங்கியுள்ளனர். வழக்கின் பல்வேறு பரிமாணங்களைக் கருத்தில் கொண்டு, விசாரணையைச் சில குறிப்பிட்ட பிரிவுகளாகப் பிரித்துச் செயல்படச் சிறப்பு குழு திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, முந்தைய விசாரணையின் போது நடவடிக்கை எடுக்காமல் இருக்கப் பணப்பரிமாற்றம் எதுவும் நடைபெற்றதா என்பது குறித்தும், இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்களைக் கண்டறிந்து பிடிப்பதற்கும் தனித்தனியாகப் பிரிந்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிக்க: ஜெம் வீரமணி வழக்கு.. “திமுக ஆட்சியில் யாரையும் காப்பாற்ற உத்தரவிடவில்லை!”.. மு.க. ஸ்டாலின் பாய்ச்சல்!!

அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன?:

சென்னை காவல் துறையின் உயர் மட்ட அதிகாரிகளின் இடமாற்றத்தைத் தொடர்ந்து, அடுத்த நாளே இந்த சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டிருப்பது இவ்வழக்கின் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது. புதிய சிறப்பு புலனாய்வு குழுவின் மூலம் இந்த வழக்கில் அடுத்தடுத்து அதிரடி திருப்பங்களும், கூடுதல் ஆதாரங்களின் அடிப்படையில் விரிவான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us