AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஜெம் வீரமணி வழக்கு.. சாந்தி, மகேந்திர சிம்மனிடம் விடிய விடிய போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை!

Gem Veeramani Case: ஜெம் கிரானைட்ஸ் வீரமணி மீதான போக்சோ வழக்கில், கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளிகளான சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்மனை 3 நாள் போலீஸ் காவலில் எடுத்து விடிய விடிய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வீடியோக்கள் மூலம் மிரட்டி பணம் பறித்தது மற்றும் முக்கிய புள்ளிகளின் தொடர்பு குறித்து பல்வேறு கோணங்களில் கிடுக்கிப்பிடி விசாரணை நடைபெற்று வருகிறது.

ஜெம் வீரமணி வழக்கு.. சாந்தி, மகேந்திர சிம்மனிடம் விடிய விடிய போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை!
ஜெம் வீரமணி, சாந்தி, மகேந்திர சிம்மன்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 25 Sep 2026 08:09 AM IST

சென்னை, செப்.25: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், பிரபல ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான வீரமணி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்மன், கணேசன் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தமிழகத்தையே உலுக்கிய இந்த போக்சோ வழக்கில், வழக்கை மேலும் தீவிரப்படுத்தும் விதமாக, நீதிமன்ற அனுமதி பெற்று சாந்தி மற்றும் மகேந்திர சிம்மன் ஆகிய இருவரையும் 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரகசிய இடத்தில் வைத்து நேற்றிரவு தொடங்கி விடிய விடிய நடைபெற்ற இந்த விசாரணையில், வழக்கில் தொடர்புடைய பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் மற்றும் புதிய உண்மைகள் வெளிவரத் தொடங்கியுள்ளன.

இதையும் படிக்க: ஜெம் வீரமணி வழக்கு.. “திமுக ஆட்சியில் யாரையும் காப்பாற்ற உத்தரவிடவில்லை!”.. மு.க. ஸ்டாலின் பாய்ச்சல்!!

வாக்குமூலங்களின் அடிப்படையில் விசாரணை:

ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள வீரமணி மற்றும் கணேசன் ஆகியோர் அளித்த வாக்குமூலங்களின் அடிப்படையில், சாந்தி மற்றும் மகேந்திர சிம்மனிடம் போலீசார் பலகட்டக் கேள்விகளைக் கேட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக, தொழிலதிபர் வீரமணி எத்தனை ஆண்டுகளாக இதுபோன்ற சிறுமிகளுக்கு பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகிறார், இதுவரை எத்தனை சிறுமிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்து சாந்தியிடம் தீவிரமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சாந்தியே இந்த விவகாரத்தில் முதன்மை நபராகவும், தரகராகவும் செயல்பட்டிருக்கக் கூடும் என்பதால், அவரது வாக்குமூலத்தை போலீசார் விரிவாகப் பதிவு செய்து வருகின்றனர்.

வீடியோக்கள் மூலம் பிளாக்மெயில்:

இந்த வழக்கின் மற்றொரு முக்கிய கோணமாக, சிறுமிகளுடன் வீரமணி இருக்கும் பாலியல் வீடியோக்கள் வெளியானது அமைந்தது. அந்த வீடியோக்களை வைத்து சாந்தி, கணேசன் மற்றும் பிரகாஷ் உள்ளிட்டோர் வீரமணியை மிரட்டி பெருந்தொகையை பறித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சாந்தியின் செல்போனில் இருந்தும் இந்த வீடியோக்கள் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், வேறு யாருக்கெல்லாம் இந்த வீடியோக்கள் பகிரப்பட்டன, இந்த வீடியோக்களைப் பயன்படுத்தி வீரமணியிடம் இருந்து யார் யாரெல்லாம் எவ்வளவு கோடி பணத்தைக் கறந்தார்கள் என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

முக்கியப் புள்ளிகளின் தொடர்புகள்:

இவ்விவகாரத்தில் வீரமணியைத் தவிர வேறு ஏதேனும் செல்வாக்குமிக்க முக்கியப் புள்ளிகளுக்குத் தொடர்பு உள்ளதா, சிறுமிகள் வேறு யாருக்கேனும் அத்துமீறலுக்கு உள்ளாக்கப்பட்டார்களா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், இந்த விவகாரத்தை மறைப்பதற்காகவும், வழக்கு விசாரணையைத் திசைதிருப்புவதற்காகவும் எந்தெந்த காவல்துறை அதிகாரிகளுக்கோ அல்லது பிற முக்கிய நபர்களுக்கோ வீரமணி தரப்பில் இருந்து பல கோடி ரூபாய் பணம் கைமாறியது என்பது குறித்தும் கிடுக்கிப்பிடி விசாரணை நடைபெறுகிறது. சாந்திக்கு எதிராக அச்சுறுத்தல்கள் எழுந்தபோது அவர் அரசியல் பிரமுகர்களை நாடியதன் பின்னணியையும் போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.

இதையும் படிக்க: நிர்வாண கோலத்தில் ஜெம் வீரமணி? சிறுமியுடன் உல்லாசமாக இருந்த ரகசிய காட்சிகள் கசிவு.. வழக்கில் அடுத்தக்கட்ட பரபரப்பு!

நேரில் ஆய்வு செய்ய போலீசார் திட்டம்:

சென்னையில் போயஸ் கார்டனில் உள்ள வீட்டில் மட்டும்தான் இந்த அத்துமீறல்கள் நடைபெற்றனவா, அல்லது வீரமணிக்குச் சொந்தமான பிற இடங்களிலும் இத்தகைய சம்பவங்கள் நடந்தனவா என்பதை அறிவதற்கும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, சாந்தியை நேரடியாகச் சம்பவ இடங்களுக்கு அழைத்துச் சென்று நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். 3 நாள் போலீஸ் காவலில் பெறப்படும் சாந்தியின் வாக்குமூலங்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில், அடுத்தகட்டமாக மேலும் சிலர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாகக் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Follow Us