AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Meesaya Murukku 2: நாளை வெளியாகிறது ஹிப்ஹாப் ஆதியின் மீசையமுறுக்கு 2 பட ட்ரெய்லர்!

Meesaya Murukku 2 Trailer Release Update: தமிழ் சினிமாவில் பிரபலமான எழுத்தாளராக இருந்துவருபவர் ஹிப்ஹாப் ஆதி. இவரின் இயக்கத்தில், நடிப்பில், இசையமைப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம்தான் மீசையமுறுக்கு 2. இந்த படமானது சிறப்பான கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இதன் ட்ரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Meesaya Murukku 2: நாளை வெளியாகிறது ஹிப்ஹாப் ஆதியின் மீசையமுறுக்கு 2 பட ட்ரெய்லர்!
மீசைய முறுக்கு 2 டிரெய்லர் அப்டேட்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 11 Sep 2026 14:38 PM IST

கோலிவுட் சினிமாவில் இசையமைப்பாளராக நுழைந்து, பின் நடிகராக அறிமுகமானவர் ஹிப்ஹாப் ஆதி (Hiphop Aadhi). இவரின் இயக்கத்திலும் பல படங்கள் வெளியாகியுள்ளது. இவர் கடந்த 2017ம் ஆண்டில் வெளியான மீசையமுறுக்கு (Meesaya Murukku ) என்ற படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமானார். இந்த படத்தை ஹிப்ஹாப் ஆதியே இயக்கியிருந்த நிலையில், சுந்தர் சி தயாரித்திருந்தார். இவரின் இயக்கத்தில் உருவான இப்படம் இவருக்கு எதிர்பாராத வரவேற்பை பெற்றிருந்தது. இதன் பிறகு படங்களில் ஹீரோவாக நடிப்பதிலும் ஆதி ஆர்வம் காட்டியிருந்தார். இந்நிலையில் 2024ம் ஆண்டிற்கு பின் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு பிறகு, ஹிப்ஹாப் ஆதியின் நடிப்பில் உருவாகியுள்ள படம்தான் மீசையமுறுக்கு 2 (Meesaya Murukku 2).

இதில் ஆதி, நடிகர், இசையமைப்பாளர் மற்றும் இயக்குநராக பணியாற்றியுள்ளார். சிறப்பான கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இதன் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது என்பது குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: மனமா படையல் தயாராகிட்டு இருக்கு… சிவகார்த்திகேயனின் சேயோன் பட 2வது ஷெட்யூல் ஷூட்டிங் நிறைவு!

ஹிப்ஹாப் ஆதியின் மீசையமுறுக்கு 2 படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:

இந்த மீசையமுறுக்கு 2 படத்தில் ஹிப்ஹாப் ஆதி ஹீரோவாக , மொத்தம் 3 வேடங்களில் அவர் நடித்துள்ளாராம். இப்படமும் மீசையமுறுக்கு 1 படத்தை போலவே இசை மற்றும் காதலை மையமாக கொண்ட கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாம்.

இதையும் படிங்க: முடிஞ்சா என்ன வெளிய அனுப்புங்க.. போட்டியாளர்களிடையே சேலஞ் செய்த முனியம்மாள் – சூடுபிடிக்கும் பிக் பாஸ்!

இப்படம் 2026ம் ஆண்டு செப்டம்பரில் வெளியாகி காத்திருக்கும் நிலையில், ட்ரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் நாளை (12/09/2026) உலகமெங்கும் வெளியாகுவதாக படக்குழு அறிவித்துள்ளது.

ஹிப்ஹாப் ஆதியின் மீசையமுறுக்கு 2 பட ரிலீஸ்:

இந்த படத்தில் ஹிப்ஹாப் ஆதி, கெட்டிகா சர்மா, சைத்ரா ஆச்சார், ரம்யா ரங்கநாதன், பாபா பாஸ்கர் மற்றும் ஹர்ஷத் கான் போன்ற பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர். இப்படமானது சிறப்பான கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இதன் மீது எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளது. இப்படமானது வரும் 2026ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. மீசையமுறுக்கு 1 படத்தை போலவே இப்படமும் நிச்சயம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெரும் என அப்படக்குழு எதிர்பார்த்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us