26 ஆண்டுகளைக் கடந்தது சூர்யா – ஜோதிகா நடிப்பில் வெளியான உயிரிலே கலந்தது படம்!
26 Years Of Uyirile Kalanthathu Movie | தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடும் ஜோடிகளில் ஒரு ஜோடிதான் நடிகர்கள் சூர்யா மற்றும் ஜோதிகா. இவர்கள் இருவரின் நடிப்பில் முன்னதாக வெளியான உயிரிலே கலந்தது படம் இன்றுடன் 26 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் ஒன்றாக இணைந்து நடித்த நடிகர் மற்றும் நடிகை காதலித்து திருமணம் செய்து கொள்வது தொடர்ந்து பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. அதில் எத்தனை ஜோடிகள் திருமண வாழ்க்கையில் சிறந்து விளங்கினர்கள் என்றால் அது கேள்விக்குறியே. அப்படி இருக்கும் நிலையில் திரைப்படங்களில் ஒன்றாக நடித்த போதே காதலிக்க தொடங்கிய நடிகர்கள் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் காதலித்து திருமணம் செய்து தற்போது 20 ஆண்டுகளைக் கடந்தது. தங்களது 20வது ஆண்டு திருமண நாளை மிகவும் கோலாகலமாக கொண்டாடினர். அது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி தொடர்ந்து வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் நடிகர்கள் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் இணைந்து நடித்த உயிரிலே கலந்தது என்ற படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 26 ஆண்டுகளை நிறைவு செய்தது.
இந்தப் படத்தை இயக்குநர் கே.ஆர்.ஜெயா எழுதி இயக்கி இருந்தார். மேலும் நடிகர்கள் சூர்யா மற்றும் ஜோதிகா உடன் இணைந்து இந்தப் படத்தில் நடிகர்கள் ரகுவரன், ஹரி பிரசாந்த், சிவகுமார், ராதிகா, முத்தம் சிவகுமார், பாலாஜி, கனல் கண்ணன், வையாபுரி, டி.ஆர்.கே.கிரண், சாப்ளின் பாலு மற்றும் அரவிந்த் ஆகாஷ் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
26 ஆண்டுகளைக் கடந்தது சூர்யா – ஜோதிகாவின் உயிரிலே கலந்தது படம்:
இந்தப் படத்தில் சிவக்குமார் – ராதிகா தம்பதியின் மகன்களாக ரகுவரன் மற்றும் சூர்யா இருவரும் நடித்து இருந்தனர். இதில் மூத்த மகனாக ஜாலியாக இருந்த ரகுவரன் இரண்டாவதாக தனது தம்பி சூர்யா பிறந்த பிறகு தனக்கு கிடைத்த பாசம் கிடைக்கவில்லை என்று நினைக்கிறார். இதன் காரணமாக சூர்யா மீது சிறு வயதில் இருந்தே ரகுவரனுக்கு கோபம் இருக்கிறது. அந்த கோபம் அதிகரித்து ஒரு கட்டத்தில் சூர்யாவை கொலை செய்கிறார் ரகுவரன்.




Also Read… அசோக் செல்வனின் அன்பில் அவன் படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்திவைத்தது படக்குழு – என்ன காரணம் தெரியுமா?
இப்படி இருக்கும் சூழலில் சூர்யாவின் காதலி ஜோதிகா மிகுந்த சோகத்தில் ஆழ்கிறார். மேலும் சூர்யாவின் கொலை குறித்து கேள்வி எழுந்து அதனை ஜோதிகாவின் அண்ணன் கனல் கண்ணன் விசாரிக்கும் போது அனைத்து உண்மைகளும் தெரிகிறது. இந்த படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி 26 ஆண்டுகளைக் கடந்ததை ரசிகர்கள் தொடர்ந்து கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read… தனுஷ் சார் ஷூட்டிங்கில் அப்படிதான்.. அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த விஷயம்!