AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஜெயிலர் 2 படத்திலிருந்து வெளியானது ஒன் நேம் பாடலின் லிரிக்கள் வீடியோ

One Name Lyric Video From Jailer 2 Movie | நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ஜெயிலர் 2. இந்தப் படத்தில் இருந்து மூன்றாவது சிங்கிளான ஒன் நேம் என்ற பாடலின் லிரிக்கள் வீடியோ வெளியாகி உள்ளது.

ஜெயிலர் 2 படத்திலிருந்து வெளியானது ஒன் நேம் பாடலின் லிரிக்கள் வீடியோ
ஜெயிலர் 2 Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 29 Sep 2026 18:36 PM IST

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவரை உலக அளவில் உள்ள சினிமா ரசிகர்களும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்றே அன்புடன் அழைத்து வருகின்றனர். தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிசியான நாயகனாக வலம் வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். இவர் சினிமாவில் 50 ஆண்டுகளைக் கடந்து தற்போது 75 வயதைக் கடந்தும் தொடர்ந்து இளம் தலைமுறையினருக்கு போட்டிப் போடும் விதமாக பிசியாக நடித்து வருகிறார் ரஜினிகாந்த். அதன்படி நடிகர் ரஜினிகாந்த் ஒரு படத்தில் நடித்து அந்தப் படம் திரையரங்குகளில் வெளியிடுவதற்கான போஸ்ட் புரடெக்‌ஷன் பணிகள் நடைப்பெற்று வரும் போதே நடிகர் ரஜினிகாந்த் புதிய படத்திற்காக இயக்குநரிடம் இணைந்து நடிக்கத் தொடங்கிவிடுவார். இவரின் இந்த சுறுசுறுப்பும் ரசிகர்களிடையே அதிக அளவில் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வருடத்திற்கு ஒரு படமாவது திரையரங்குகளில் வெளியாவது வழக்கமாக உள்ளது. அந்த வகையில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இந்த 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ஜெயிலர் 2. அதபடி படம் வருகின்ற அக்டோபர் மாதம் 15-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜெயிலர் 2 படத்திலிருந்து வெளியானது ஒன் நேம் பாடல் வீடியோ:

இந்தப் படத்தை இயக்குநர் நெல்சன் திலீப் குமார் எழுதி இயக்கி உள்ள நிலையில் நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ள நிலையில் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.

படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படம் தொடர்பான அப்டேட்களை படக்குழு தொடர்ந்து வெளியிட்டு வருகின்றது. அந்த வகையில் தற்போது ஜெயிலர் 2 படத்தில் இருந்து 3-வது பாடலனின் லிரிக்கள் வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி ஒன் நேம் என்ற அந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… 6 பேர் டேஞ்சர் ஸூனில்.. 3 பேர் வெளியப்போயே ஆகணும் – அந்த முடிவை எடுக்கப்போவது யார்?- பிக் பாஸ் புரோமோ!

ஜெயிலர் 2 படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… கவின் – நயன்தாரா நடிப்பில் வெளியான ஹாய் படம் எப்படி இருக்கு? ஓடிடி விமர்சனம் இதோ!

Follow Us