அம்மானா சாமி மாதிரி… வெளியானது விஜய் சேதுபதியின் ஸ்லம்டாக் 33 டெம்பிள் ரோடு படத்தின் க்ளிம்ஸ் வீடியோ!
Zarina Wahab as ZUBEIDAA Glimpse Tamil | தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி தொடர்ந்து தென்னிந்திய மொழிகளிலும் பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் இவரது நடிப்பில் தற்போது உருவாகி உள்ள ஸ்லம்டாக் 33 டெம்பிள் ரோடு படத்தின் க்ளிம்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் வெளியாகும் பெரும்பாலான படங்கள் ரசிகர்களிடையே தொடர்ந்து விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் நடிகர் விஜய் சேதுபதி தொடர்ந்து தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி தென்னிந்திய மொழிகளிலும் அதிக அளவில் படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் இந்த 2026-ம் ஆண்டில் தமிழ் மொழியில் மட்டும் இன்றி தென்னிந்திய மொழிகளிலும் தொடர்ந்து அதிக அளவில் படங்கள் உருவாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் இறுதியாக நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் காந்தி டால்க்ஸ் என்ற படம் திரையரங்குகளில் வெளியானது.
இந்தப் படம் புது முயற்சியாக தமிழ் சினிமாவில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக விஜய் சேதுபதி நடிப்பில் பத்தா படம் தமிழ் சினிமாவில் வெளியாக உள்ளது. அந்த படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்தின் புரமோசன் பணிகளில் விஜய் சேதுபதி தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார்.




வெளியானது ஸ்லம்டாக் 33 டெம்பிள் ரோடு படத்தின் க்ளிம்ஸ் வீடியோ:
இந்த நிலையில் இயக்குநர் பூரி ஜெகன்நாத் எழுதி இயக்கி உள்ள ஸ்லம்டாக் 33 டெம்பிள் ரோடு படத்திலும் நடிகர் விஜய் சேதுபதி நாயகனாக நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் படத்தில் இருந்து நடிகை சரினா வகாப்பின் கேரக்டர் அறிமுக வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read… இணையத்தில் வைரலாகும் சிக்மா படத்தின் 4-வது சிங்கிள் சுலோச்சனா!
ஸ்லம்டாக் 33 டெம்பிள் ரோடு படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
HUMBLE. LOVING. SELFLESS 💥
Meet #Zarinawahab as ZUBEIDAA from #SlumDog – 33 Temple Road ❤️🔥
A #PuriJagannadh film 🎬@Charmmeofficial Presents 🎥
Produced by Puri Jagannadh, Charmme Kaur, JB NarayanRao KondrollaReleases in Tamil, Telugu, Hindi,… pic.twitter.com/Y4cELdeToe
— Puri Connects (@PuriConnects) September 28, 2026
Also Read… தயாரிப்பாளர் தொடுத்த வழக்கில் நடிகர் ராஜ்கிரணுக்கு நிபந்தனை முன்ஜாமீன்…