தயாரிப்பாளர் தொடுத்த வழக்கில் நடிகர் ராஜ்கிரணுக்கு நிபந்தனை முன்ஜாமீன்…
Actor Rajkiran | தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் ராஜ்கிரண். இவர் மீது தயாரிப்பாளர் தொடுத்த வழக்கு ஒன்று இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கில் நடிகர் ராஜ்கிரணுக்கு நிபந்தனை உடன் முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.
தமிழ் சினிமாவில் கடந்த 1989-ம் ஆண்டு வெளியானது என்ன பெத்த ராசா. இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகம் ஆனார் ராஜ்கிரண். மேலும் இந்தப் படத்தில் ராமராஜன் நாயகனாக நடித்து இருந்த நிலையில் ஒரு சிறிய வேடத்தில் ராஜ்கிரண் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் கடந்த 1991-ம் ஆண்டு வெளியானது என் ராசாவின் மனசிலே. இந்தப் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார் கஸ்தூரி ராஜா. மேலும் நடிகர் ராஜ்கிரண் இந்தப் படத்தில் தான் நாயகனாக அறிமுகம் ஆனார் என்பதும் குறிப்பிடத்தக்கது. நாயகனாக அறிமுகமான முதல் படமே ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் அடுத்தடுத்தப் படங்களில் பிசியாக நடிக்கத் தொடங்கினார் ராஜ்கிரண்.
தொடர்ந்து தமிழ் சினிமாவில் நாயகனாக நடித்து வந்த ராஜ்கிரண் ஒரு கட்டத்திற்கு பிறகு கதாப்பாத்திர நடிகராக நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களில் நடித்து வந்த நடிகர் ராஜ்கிரண் இறுதியாக நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான வா வாத்தியார் என்ற படத்தில் நடித்து இருந்தார். இவர் இந்தப் படத்தில் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகனாக நடித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.




தயாரிப்பாளர் தொடுத்த வழக்கில் ராஜ்கிரணுக்கு நிபந்தனை முன்ஜாமீன்:
தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிசியான பிரலமான நடிகராக உள்ள நடிகர் ராஜ்கிரண் மீது தயாரிப்பாளர் ஒருவர் சமீபத்தில் வழக்கு பதிவு செய்து இருந்தார். அதில் தன்னிடம் படத்தில் நடிப்பதற்காக வாங்கிய 40 லட்சம் ரூபாய் முன் தொகையை ராஜ்கிரண் திருப்பி கொடுக்கவில்லை என்றும் அதனை கேட்டு வழக்கு தொடுத்து இருந்தார். இந்த வழக்கில் முன் ஜாமின் கோரி இருந்த ராஜ்கிரண் வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. அந்த வழக்கில் நடிகர் ராஜ்கிரணுக்கு நிபந்தனை முன் ஜாமினை வழங்கி உள்ளது நீதிமன்றம். இந்த நிலையில் இந்த செய்தி தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
Also Read… நிவின் பாலியின் பெத்தலேக குடும்ப யூனிட் படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது? வைரலாகும் தகவல்