Nagarjuna: அதே அன்பை உங்களுக்கும் கொடுப்பார்கள்.. ஜேசன் சஞ்சய் பற்றி பேசிய நாகர்ஜுனா!
Nagarjuna Telugu Bigg Boss: தெலுங்கு சினிமாவில் மக்களால் கிங் என்று பாசமுடன் அழைக்கப்பட்டுவருபவர்தான் நாகர்ஜுனா. இவரின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சமீபத்தில் சிக்மா படக்குழுவுடன் ஜேசன் சஞ்சய் கலந்துகொண்டார். அதில் நாகர்ஜுனா, முதல்வர் விஜய் மற்றும் ஜேசன் சஞ்சய் குறித்து பேசியுள்ளார்.
டோலிவுட் சினிமாவில் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கும் மேலாக நாயகனகாவே நடித்துவருபவர் நாகர்ஜுனா (Nagarjuna). இவரின் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளிலும் படங்கள் வெளியாகியிருக்கிறது. இறுதியாக இவர் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Superstar Rajinikanth) நடித்திருந்த கூலி (Coolie) படத்தில் அதிரடி வில்லனாக நடித்திருந்தார். இந்த படமானது கடந்த 2025ம் ஆண்டில் வெளியாகியிருந்த நிலையில், ஓரளவு நல்ல வரவேற்பையே பெற்றிருந்தது. இந்த படத்திற்கு பின் இவரின் நடிப்பில் குபேரா (Kuberaa) என்ற படம் வெளியானது. தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் மற்றும் நாகர்ஜுனா இணைந்து நடித்திருந்தனர். இந்த படத்திற்கு பிறகும் புது புது படங்களில் நாகார்ஜூனா ஒப்பந்தமாகிவருகிறார். மேலும் இவர் பிக் பாஸ் தெலுங்கு (Bigg Boss telugu) நிகழ்ச்சின் தொகுப்பாளராகவும் பணியாற்றிவருகிறார்.
சமீபத்தில் இந்த நிகழ்ச்சியில் புரோமோஷனுக்காக சிக்மா படக்குழு கலந்துகொண்டிருந்தது. ஜேசன் சஞ்சய் (Jason Sanjay) மற்றும் சந்தீப் கிஷன் (Sundeep Kishan) இருவருமே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்த நிலையில், அதில் நாகர்ஜுனா மூத்தவர் விஜய் குறித்தும், ஜேசன் சஞ்சய் பற்றியும் பேசியுள்ளார்.




இதையும் படிங்க: விஷாலின் புருஷன் பட கிளைமேக்ஸ் சண்டை காட்சி விபத்து – இணையத்தில் வைரலாகும் வீடியோ!
ஜேசன் சஞ்சய் மற்றும் முதல்வர் விஜய் குறித்து நாகர்ஜுனா பேசிய விஷயம்:
அந்த நிகழ்ச்சியின் மேடையில் பேசிய நாகர்ஜுனா, அதில் “எங்கள் தெலுங்கு ரசிகர்கள் மிகவும் திறந்த மனதுடன் இருப்பார்கள். உங்கள் அப்பாவின் ஒவ்வொரு படமும் தெலுங்கு மாநிலங்களில் மிகப்பெரிய வசூலை ஈட்டியது. மேலும், அவர்கள் இங்கே விஜய் சாரை மிகவும் விரும்புவார்கள்.
இதையும் படிங்க: காதல் என்று வரும்போது, பொருத்தத்தை விட ஈர்ப்பு மேலோங்குமா? இணையத்தில் வைரலாகும் #லவ் பட ட்ரெய்லர்!
அதே அன்பு உங்களுக்கும், உங்கள் சிக்மா படத்திற்கும் கிடைக்கும் என்று நம்புகிறேன் என அவர் கூறினார். உடனே பேசிய ஜேசன் சஞ்சய், மிக்க நன்றி சார், உங்களிடமிருந்து இந்த அன்பு வருவது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது என தெரிவித்திருந்தார்.
முதல்வர் விஜய் மற்றும் ஜேசன் சஞ்சய் பற்றி நாகர்ஜுனா பேசியதாக வைரலாகும் வீடியோ பதிவு:
#Nagarjuna: Our telugu audience are very open. Every film of your dad collected huge in Telugu states. And they love @actorvijay garu here. Hope the same love will be given to you and your film #Sigma🔥#JasonSanjay: Thank you so much sir, meas a lot coming from you ♥️♥️…
— AmuthaBharathi (@CinemaWithAB) September 26, 2026
இந்த சிக்மா படமானது ஜேசன் சஞ்சய் இயக்குநராக இயக்கியுள்ள புதிய படமாகும். இந்த படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடித்திருக்கும் நிலையில், பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகியுள்ளதாம். மேலும் இப்படமானது வரும் 2026ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதியில் வெளியாக காத்திருக்கும் நிலையில், மக்கள் மத்தியில் நிச்சயம் வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.