Karthik Subbaraj: நீங்கள் அதை அந்த கண்ணோட்டத்தில் பார்க்கக்கூடாது.. டோரதி பட விமர்சனங்கள் குறித்து கார்த்திக் சுப்புராஜ்!
Dorothy Movie Controversy: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 10வது வெளியாகியுள்ள திரைப்படம்தான் டோரதி. இந்த படத்தில் ரிஷிகாந்த் மற்றும் சனந்த் இருவருமே முக்கியமான வேடத்தில் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு LGBTQ குறித்து எழுந்துவரும் விமர்சனங்கள் குறித்து கார்த்திக் சுப்புராஜ் விளக்கம் அளித்துள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான இயக்குநர்களில் ஒருவராக இருந்துவருபவர் கார்த்திக் சுப்புராஜ் (Karthik Subbaraj). இவரின் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பிரம்மாண்டமான படங்கள் வெளியாகியிருந்தது. இறுதியாக இவரின் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருந்த படம் ரெட்ரோ (Retro). இதில் சூர்யா (Suriya) ஹீரோவாக நடித்திருந்த நிலையில், இப்படமானது ஓரளவு நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்த படத்திற்கு பின் குறைந்த பட்ஜெட்டில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், வெளியான திரைப்படம்தான் டோரதி (Dorothy). இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி, தயாரித்துள்ள இப்படம்தான் டோரதி. இந்த படத்தில் ரிஷிகாந்த் (Rishikanth), சனந்த் (Sananth) மற்றும் கீர்த்தி சுரேஷ் (Keerthy Suresh) போன்ற பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். வித்தியாசமான கதைக்களத்தில் உருவான இப்படம் கடந்த 2026ம் ஆண்டில் செப்டம்பர் 25ம் தேதியுடன் திரையரங்குகளில் வெளியானது.
இந்த படமானது வெளியாகி மக்கள் மத்தியில் பல நெகட்டிவ் விமர்சனங்களையே பெற்றுவருகிறது. இந்த படத்தில் LGPTQ குறித்த சில காட்சிகள் இருக்கும் நிலையில், அதற்காக பல எதிர்ப்புகள் இருக்கிறது. தற்போது அந்த எதிர்பார்ப்புகள் மற்றும் விமர்சனங்கள் குறித்து கார்த்திக் சுப்புராஜ் விளக்கம் கொடுத்துள்ளார்.




இதையும் படிங்க: என்னப்பா கஷ்டமா இருக்கா? அவினாஷ் – ஜேசனை வார்த்தைகளால் வெளுத்துவாங்கிய லக்ஷ்மி பிரியா – புரோமோ!
டோரதி திரைப்படத்தின் எதிர்பார்ப்புகள் மற்றும் விமர்சனங்கள் குறித்து கார்த்திக் சுப்புராஜ்:
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய கார்த்திக் சுப்புராஜ் அதில், “முத்துமணி பாடலுடன் கிளைமாக்ஸைக் கண்ட திரையரங்குகளில் அனைவரும் கைதட்டினர். கிளைமாக்ஸில் ஒரு புதிய பெண் பிறந்தாள், அதை நீங்கள் LGBTQ என்ற கண்ணோட்டத்தில் பார்க்கக்கூடாது. உருமாற்றத்திற்குப் பிறகு ரிஷிகாந்த், சனந்த் மீது காதல் கொண்டார்.
இதையும் படிங்க: யாரோ இவன் யாரோ.. 2 ஆண்டுகளை நிறைவு செய்த மெய்யழகன் திரைப்படம்!
திருச்சிறம்பலம் படத்திலும் நட்பு எப்படி காதலாக மாறியது என்பதை நாம் பார்த்திருக்கிறோம். இதிலும் நீங்கள் அதைப் பார்க்கலாம். இதுதான் கிளைமாக்ஸாக இருக்க வேண்டும் என்பதில் நான் ஆரம்பத்திலிருந்தே உறுதியாக இருந்தேன்” என அதில் அவர் தெரிவித்துள்ளார். தற்போது இதுகுறித்த தகவல் இணையத்தில் வைரலாகிவருகிறது.
டோரதி திரைப்படம் குறித்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்ட பதிவு:
Be Calm – Believe in AUDIENCE 🙏🏻❤️#Dorothy #DorothyWinsHearts pic.twitter.com/vQAU46bAQC
— karthik subbaraj (@karthiksubbaraj) September 27, 2026
டோரதி திரைப்படமானது மக்கள் மத்தியில் ஒரு கலவையான விமர்சனங்கள் இருந்துவருகிறது. அந்த விதத்தில் இப்படத்திற்கு பல்வேறு நட்சத்திர நடிகர்கள் மற்றும் இயக்குநர்களும் பாராட்டிவருகின்றனர். மக்களும் ஒருபுறம் ஆதரித்தாலும், மறொருபுரம் இப்படத்தின் மீது எதிர்ப்புகள் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.