AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

விக்ரமின் சியான் 63 படத்தின் நாயகி இவரா? வைரலாகும் தகவல்

Chiyaan 63 Movie Heroine Update: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விக்ரம். இவரது நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள படத்திற்கு தற்காலிகமாக சியான் 63 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் நாயகியாக நடிக்க உள்ளது யார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

விக்ரமின் சியான் 63 படத்தின் நாயகி இவரா? வைரலாகும் தகவல்
சியான் 63Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 18 Apr 2026 19:03 PM IST

தமிழ் சினிமா மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா முழுவதும் பெரிய அளவில் ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளவர் நடிகர் விக்ரம். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. இறுதியாக நடிகர் விக்ரம் நாயகனாக நடித்து திரையரங்குகளில் வெளியான படம் வீர தீர சூரன். இந்தப் படத்தினை இயக்குநர் எஸ்.யு. அருண் குமார் எழுதி இயக்கி இருந்த நிலையில் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் முன்னதாக வெளியான நிலையில் முதல் பாகம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிலையில் நடிகர் சியான் விக்ரமின் அடுத்தப் படம் குறித்த அறிவிப்பு வெளியானது. அதன்படி நேற்று நடிகர் சியான் விக்ரம் தனது 60-வது பிறந்த நாளை கொண்டாடினார்.

இந்த பிறந்த நாளை முன்னிட்டு நடிகர் சியான் விக்ரம் நடிப்பில் 63-வது படமாக உருவாக உள்ள படத்தின் அப்டேட்கள் வெளியானது. அதன்படி நடிகர் சியான் விக்ரம் தனது 63-வது படத்திற்காக இயக்குநர் ஆனந்த் ஷங்கர் உடன் இணைய உள்ளார். இவர்கள் இருவரின் கூட்டணி இரண்டாவது முறையாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி ஃபிலிம்ஸ் சார்பாக தயாரிப்பாளர்கள் செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் இணைந்து தயாரிக்கின்றனர்.

விக்ரமின் சியான் 63 படத்தின் நாயகி இவரா?

இந்தப் படத்தில் நடிகர் விக்ரம் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மற்ற நடிகர்கள் குறித்த அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இந்த நிலையில் ‘வீர தீர சூரன்’ திரைப்படத்தைத் தயாரித்த ரியா ஷிபு, இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும் சமீபத்தில் வெளியான மலையாளத் திரைப்படமான சர்வமும் மாயாவில் இவர் நாயகியாக நடித்திருந்தார். அப்படம் பெரும் வெற்றியைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து, சியான் 63 திரைப்படத்திலும் இவர் நடிக்கத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு மே மாதத்தின் நடுப்பகுதியிலோ அல்லது பிற்பகுதியிலோ தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை ஆனந்த் ஷங்கர் இயக்கவுள்ளார்.என்பதும் குறிப்பிடத்தக்கது.

Also Read… Sai Abhynkkar: தனுஷின் டி55 படத்தின் இசையமைப்பில் தீவிரமாக இறங்கிய சாய் அபயங்கர் – வைரலாகும் பதிவு!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… Ghilli: அப்படி போடு போடு போடு… 22 ஆண்டுகளை கடந்த தளபதி விஜய் – திரிஷாவின் கில்லி திரைப்படம்!

Follow Us