Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Janhvi Kapoor: அம்மா ஸ்ரீதேவியின் இளமை ரகசியம் இதுதான்.. ஜான்வி கபூர் சொன்ன விஷயம்!

Janhvi Kapoor Shared Sridevis Beauty Secret: பான் இந்திய சினிமாவில் இளமை நடிகையாக கலக்கி வருபவர் ஜான்வி கபூர். இவர் சமீபத்தில் ஒரு நேர்கணல் ஒன்றில் தனது அம்மாவும், மறைந்த நடிகையுமான ஸ்ரீதேவியின் இளமை ரகசியத்திற்கு என்ன காரணம் என்பதை கூறியுள்ளார். அது குறித்து விவரமாக பார்க்கலாம்.

Barath Murugan
Barath Murugan | Published: 24 Jan 2026 16:54 PM IST
பாலிவுட் சினிமாவில் இளம் நடிகையாக ரசிகர்கள் மனதில் இடம்பிடித்திருப்பவர் ஜான்வி கபூர். இவர் இந்தி மற்றும் தெலுங்கு போன்ற மொழி படங்களில் சிறப்பாக நடித்துவருகிறார். இவரின் நடிப்பில் ஆண்டிற்கு 2 படங்களுக்கும் குறையாமல் வெளியாகிவருகிறது. அந்த விதத்தில் இவர் ராம் சரணின் பெடி என்ற படத்திலும் கதாநாயகியாக நடித்துவருகிறார்.

1 / 5
இயக்குநர் புச்சி பாபு சனாவின் இயக்கத்தில் ராம் சரண் நடித்துவரும் கிரிக்கெட் தொடர்பான கதைக்களத்தில் தயாராகிவரும் படம் பெடி. இதில் ராம் சரணுக்கு ஜோடியாக நடிகை ஜான்வி கபூர் நடித்துள்ளார். இப்படம் 2026 மார்ச் மாதத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுவரும் நிலையில், ஷூட்டிங் இன்னும் முடியவில்லை.

2 / 5
இப்படியாக நடிகை ஜான்வி கபூர் தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழி படங்களில் நடித்து அசத்திவருகிறார். இவரின் தாய், மறைந்த நடிகை ஸ்ரீதேவி என்பது அனைவருக்கும் தெரிந்ததே. தனது தாயின் இடத்தை தற்போது சினிமாவில் நடிகை ஜான்வி கபூர் பிடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் நேர்காணல் ஒன்றில் தனது தாய் ஸ்ரீதேவியின் இளமை ரகசியத்திற்கு கரணம் என்ன என்பது பற்றி கூறியுள்ளார்.

3 / 5
அந்த நேர்காணலில் நடிகை ஜான்வி கபூர், எங்கள் வீட்டில் காலை நேர உணவில் நிச்சயமாக பழங்கள் இடம்பெற்றிருக்கும். மீதமிருக்கும் பழங்களை ஜூஸாக்கி, அம்மா தனது முகத்தில் போட்டுக்கொள்வார். சிறிது நேரம் கிழித்து அதைக் கழுவினால், முகம் பளபளப்பாக இருக்கும். அந்த பழங்கள் முகத்தில் புத்துணர்ச்சியை கொடுத்து, இறந்த செல்களை நீக்குகிறது.

4 / 5
இந்த பழக்கத்தை அம்மா தொடர்ந்து கடைபிடித்துவந்தார் , தற்போது அந்த பழக்கம் எனக்கும் வந்துவிட்டது என நடிகை ஜான்வி கபூர், தனது அம்மாவான மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் இளமை ரகசியம் குறித்து அதில் பேசியிருந்தார். இது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவிவருகிறது.

5 / 5