AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இது நிஜமாவே பைக் ரேஸ் படம்தானா? ஓடிடியில் வெளியாகி உள்ள பைக்கர் படத்தின் விமர்சனம் இதோ

Sharwanands Biker Movie OTT Review Here | தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் ஷர்வாணந்த். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான பைக்கர் படம் தற்போது ஓடிடியில் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தின் விமர்சனத்தை தற்போது பார்க்கலாம்.

இது நிஜமாவே பைக் ரேஸ் படம்தானா? ஓடிடியில் வெளியாகி உள்ள பைக்கர் படத்தின் விமர்சனம் இதோ
பைக்கர்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 05 May 2026 21:51 PM IST

தெலுங்கு சினிமாவில் கடந்த ஏப்ரல் மாதம் 03-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் பைக்கர். இந்தப் படத்தினை இயக்குநர் அபிலாஷ் ரெட்டி கங்காரா எழுதி இயக்கி இருந்தார். ஸ்போர்ட்ஸ் ட்ராமா பாணியில் உருவாகி உள்ள இந்தப் படத்தில் நடிகர் ஷர்வாணந்த் நாயகனாக நடித்து இருந்தார். அவருடன் இணைந்து நடிகர்கள் ராஜசேகர், மாளவிகா நாயர், அதுல் குல்கர்னி, பிரம்மாஜி, துளசி, ஷஷாங்க், சௌர்யா செலமெல்லா, நிரூப் நந்தகுமார், ஆகாஷ் ஸ்ரீனிவாஸ், தயானந்த ரெட்டி, மேத்யூ வர்கீஸ், தாஸ்யம் கீதா பாஸ்கர், நவீன் நேனி, அலெக்சாண்டர் அலெக்ஸ் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். மேலும் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தயாரிப்பாளர்கள் வி. வம்சி கிருஷ்ணா ரெட்டி மற்றும் பிரமோத் உப்பலபட்டி ஆகியோர் இணைந்து பிரபல தயாரிப்பு நிறுவனமான யுவி கிரியேஷன்ஸ் சார்பாக  தயாரித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் வைபோதா இசையமைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் படம் தற்போது ஓடிடியில் வெளியாகி உள்ளது. படம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

ஷர்வானந்த்தின் பைக்கர் படத்தின் கதை என்ன?

இந்தப் படத்தின் தொடக்கத்திலேயே மகன், மனைவி என குடும்பத்தினருடன் ஷர்வானத் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். இதில் ஷர்வானந்தின் மகனுக்கு அப்பா மீது பாசம் அதிகம். தந்தை குறித்து யாராவது தப்பா பேசினா அவர்களை அடிக்கும் அளவிற்கு பாசமாக அந்த் குழந்தை இருக்கிறது. இப்படி இருக்கும் சூழலில் அதனை தெரிந்துகொண்ட போது ஷர்வானந்திற்கு தனது தந்தையின் ஞாபகம் வருகிறது.

ஷர்வானந்தின் தந்தை ராஜசேகர் பெரிய பைக் ரேசர். அவைப் போலவே ஷர்வானந்தும் பைக் ரேஸிங்கில் இருக்கிறார். பைக் ரேஸிங்கில் சிறந்து விளங்குவது போல காட்டப்படுகின்றது. இப்படி இருக்கும் சூழலில் எதிர்பாராத நிலையில் ஷர்வானந்தின் காதலி கர்பமானதால் அப்பவிடம் சொல்லாமலே ஓடிப்போகிறார்.

Also Read… தளபதி விஜய்க்கு வாழ்த்து சொன்ன சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

பல ஆண்டுகளுக்குப் பிறகு தந்தை சிக்கலில் இருப்பதை தெரிந்துகொண்டு மீண்டும் பைக் ஓட்ட வருகிறேன் என்று வருகிறார். அப்படி வந்த அவர் எப்படி தனது தந்தையை பாதுகாக்கிறார் என்பதே படத்தின் கதை. இந்திய சினிமாவில் ஒரு முக்கியமான பைக் ரேஸிங் படம் என்று படக்குழு புரமோஷனில் அதிக அளவில் பேசி இருந்தனர். ஆனால் பாதி படம் முடியும் வரை பைக் ரேஸிங் தொடர்பான ஒரு தாக்கத்தை பார்வையாளர்களுக்கு ஏற்படுத்த இந்தப் படம் தவறியது என்பதே குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

Also Read… முதல்வராகனும்… திடீரென வைரலாகும் திரிஷாவின் பழைய வீடியோ

Follow Us