AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Venkat Prabhu: முன்னிலையில் விஜய்யின் தவெக.. இயக்குநர் வெங்கட் பிரபு போட்ட பதிவு!

Venkat Prabhu X Post: 2026ம் ஆண்டிற்கான தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று 2026 மே 4ம் தேதியில் பரபரப்பாக நடைபெற்றுவருகிறது. அந்த வகையில் நடிகரும், தவெக தலைவருமான விஜய்யின் கட்சி முன்னிலை வகிக்கிறது. அந்த வகையில் விஜய்யின் முன்னிலை குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு போட்ட பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

Venkat Prabhu: முன்னிலையில் விஜய்யின் தவெக.. இயக்குநர் வெங்கட் பிரபு போட்ட பதிவு!
வெங்கட் பிரபு X போஸ்ட்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 04 May 2026 12:50 PM IST

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர்கள் ஒருவராக இருந்த்துவருபவர் வெங்கட் பிரபு (Venkat Prabhu). இவரின் இயக்கத்தில் இறுதியாக தளபதி விஜய் (Thalapathy Vijay) தி கோட் (The GOAT) என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படமானது கடந்த 2024ம் ஆண்டில் வெளியாகியிருந்தது. இந்த படத்தின் ஷூட்டிங் போதே தளபதி விஜய் அரசியல் கட்சி தொடங்குவதாக கூறியிருந்தார். அந்த வகையில் இந்த 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் விஜய், தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் (Tamilaga Vettri Kazhagam) கீழ் தனித்து நின்று போட்டியிட்டிருந்தார். இந்த தேர்தல் வாக்கு பதிவானது கடந்த 2026 ஏப்ரல் 23ம் தேதியில் நடைபெற்றிருந்த நிலையில், இன்று 2026 மே 4ம் தேதியில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுவருகிறது. அந்த வகையில் தளபதி விஜய்யின் TVK காட்சி வாக்குகளில் முன்னிலை வகிக்கிறது.

அந்த வகையில் விஜய்யின் வெற்றிக்கு ரசிகர்கள் மற்றும் தமிழ் பிரபலங்கள் ஆதரவாக பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் விஜய்யின் தவெக கட்சியின் முன்னிலை குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு ஸ்பெஷல் பதிவை வெளியிட்டுள்ளார். 2026ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலின் முடிவுகள் எதிர்பார்க்காத விதத்தில் அமைந்த நிலையில், கோலிவுட் பிரபலங்கள் கொண்டாடி வருகின்றனர்.

இதையும் படிங்க: தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை வகிக்கும் விஜய் – கொண்டாட்டத்தில் குடும்பத்தினர்… வைரலாகும் வீடியோ

விஜய்யின் கட்சி முன்னிலை குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்ட பதிவு:

அந்த பதிவில் இயக்குநர் வெங்கட் பிரபு, “THE GREATEST OF ALL TIME” என்னு அண்ட் பதிவில் குறிப்பிட்டுள்ளார். அந்த பதிவில் தவெக கட்சி கொடியில் விஜய்யின் புகைப்படம் இருக்கும்படியான வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் தி கோட் படத்தின் இசையமையும் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இது குறித்து பதிவு விஜய் ரசிகர்கள் மற்றும் தவெக கட்சியினர் மத்தியில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: டியூட் பட இயக்குநருடன் இணைந்த சிலம்பரசன்.. ஷூட்டிங் எப்போது தெரியுமா?

நடிகர் விஜய் மற்றும் வெங்கட் பிரபுவின் கூட்டணியில் இறுதியாக தி கோட் என்ற படமானது வெளியாகியிருந்தது. இந்த படமானது விஜய்க்கு பெரும் வரவேற்பை கொடுத்திருந்தது. இப்படத்தின் போதுதான் அவர் அரசியலில் இறங்கவுள்ளதாக அறிவித்திருந்தார். மேலும் ஜன நாயகன் படம்தான் தனது கடைசி படம் என்றும் தெரிவித்திருந்தார். இந்த வெற்றி கூட்டணியில் பணியாற்றிய விஜய் தற்போது, 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் முன்னிலை வகிக்கும் நிலையில், கோலிவுட் சினிமா பிரபலங்கள் கொண்டதை வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us