AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Assembly Election 2026 Results: நாடே எதிர்ப்பார்த்த நாள்.. 5 மாநில சட்டமன்ற தேர்தலுக்கான முடிவு.. மக்களின் ஆதரவு யாருக்கு?

5 State Assembly Election Result: தேர்தலுக்கான ஐந்து மாநிலங்களின் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், அவற்றுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தை எடுத்துக் கொண்டால், தமிழக வெற்றிக்கழகம் சுமார் 108 இடங்களில் முன்னிலை வகித்து முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் 73 இடங்களில் முன்னிலையில் உள்ளன. மூன்றாவது இடத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் 53 இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றன.

Assembly Election 2026 Results: நாடே எதிர்ப்பார்த்த நாள்.. 5 மாநில சட்டமன்ற தேர்தலுக்கான முடிவு.. மக்களின் ஆதரவு யாருக்கு?
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 04 May 2026 12:13 PM IST

மே 4, 2026: இந்தியாவில் புதுச்சேரி, அசாம், மேற்குவங்கம், தமிழ்நாடு, கேரளம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் நடந்து முடிந்த சூழலில், மே 4ஆம் தேதியான இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. புதுச்சேரி, கேரளம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஏப்ரல் 9ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, ஏப்ரல் 23ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் மேற்குவங்கத்தின் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. ஏப்ரல் 29ஆம் தேதி மேற்குவங்கத்தின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

5 மாநில தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை:

தேர்தலுக்கான ஐந்து மாநிலங்களின் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், அவற்றுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தை எடுத்துக் கொண்டால், தமிழக வெற்றிக்கழகம் சுமார் 108 இடங்களில் முன்னிலை வகித்து முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் 73 இடங்களில் முன்னிலையில் உள்ளன. மூன்றாவது இடத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் 53 இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றன.

3 மாநிலத்தில் முன்னிலை வகிக்கும் பாஜக:

கேரளாவை எடுத்துக் கொண்டால், 140 சட்டமன்ற தொகுதிகளில் யு.டி.எப் மற்றும் கூட்டணி கட்சிகள் 96 இடங்களில் முன்னிலை வகித்து முதலிடத்தில் உள்ளன. இரண்டாவது இடத்தில் எல்.டி.எப் மற்றும் கூட்டணி கட்சிகள் 42 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளன. மூன்றாவது இடத்தில் பாஜக மற்றும் கூட்டணி கட்சிகள் 2 இடங்களில் முன்னிலையில் உள்ளன.

புதுச்சேரி மாநிலத்தை எடுத்துக் கொண்டால், பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 20 இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றன. காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் 7 இடங்களில் முன்னிலை வகித்து இரண்டாவது இடத்தில் உள்ளன. பிற கட்சிகள் 3 இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றன.

மேலும் படிக்க: பலத்த பாதுகாப்புடன் 4 மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்.. மக்களின் தீர்ப்பு என்ன?

மேற்குவங்கத்தை எடுத்துக் கொண்டால், பாஜக 181 இடங்களில் முன்னிலை வகித்து முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் திரிணமூல் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் 15 இடங்களில் முன்னிலையில் உள்ளன. மூன்றாவது இடத்தில் காங்கிரஸ் 2 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. நான்காவது இடத்தில் பிற கட்சிகள் 5 இடங்களில் உள்ளன.

அசாமை பொருத்தவரையில், பாஜக மற்றும் கூட்டணி கட்சிகள் 101 இடங்களில் முன்னிலை வகித்து முதலிடத்தில் உள்ளன. இரண்டாவது இடத்தில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் 23 இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றன.

5 மாநிலத்தில் மக்களின் ஆதரவு யாருக்கு?

மொத்தத்தில், ஐந்து மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கை காலை முதலே தொடங்கி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு சுற்றாக முடிவுகள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக, தபால் ஓட்டுகள் காலை 8 மணிக்கு எண்ணி முடிக்கப்பட்ட நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் சுற்றுவாரியாக தொடர்ந்து எண்ணப்பட்டு வருகின்றன.

தமிழகத்தைப் பொருத்தவரையில், கூட்டணி அமைப்புகள் மூலம் ஆட்சி அமையுமா அல்லது பெரும்பான்மையுடன் தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கேரளாவில் யு.டி.எப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல், புதுச்சேரியில் பாஜக ஆட்சி அமைக்கும் என்றும், மேற்குவங்கத்தில் இதுவரை இல்லாத வகையில் முதல் முறையாக பாஜக ஆட்சி அமைக்கும் என்றும் கூறப்படுகிறது. அத்துடன், அசாமிலும் பாஜக ஆட்சி அமைக்கும் என கருத்துகள் வெளியாகி வருகின்றன.

Follow Us