Gatta Kusthi 2: வீட்டை சமாளிக்கிறதும் full-time வேலை தான்… கட்டா குஸ்தி 2 படத்தின் ஃபரோஸ்ட் லுக் வெளியீடு!
Gatta Kusthi 2 First Look: இயக்குநர் செல்ல அய்யாவு இயக்கத்தில் 2022ம் ஆண்டில் வெளியாகி வரவேற்கப்பட படம்தான் கட்டா குஸ்தி. இப்படத்தின் வெற்றியை அடுத்ததாக கட்டா குஸ்தி 2 படமானது உருவாகிவந்த நிலையில், இன்று 2026 மே 15ம் தேதியில் இதன் முதல் பார்வையை படக்குழு வெளியிட்டுள்ளது.
நடிகரும், தயாரிப்பாளருமாக தமிழ் சினிமாவில் பிரபலமானவராக இருந்துவருபவர் விஷ்ணு விஷால் (Vishnu Vishal). இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான திரைப்படம் ஆர்யன் (Aryan). ஆக்ஷ்ன் மற்றும் திரில்லர் பின்னனியில் வெளியான இந்த படமானது ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இதையடுத்து இவரின் நடிப்பில் வெளியீட்டிற்கு தயாராகிவரும் படம்தான் இரண்டு வானம் (Irandu Vaanam). இப்படமும் வரும் 2026 மே இறுதியில் வெளியாக காத்திருக்கிறது. இந்த வரிசையில், விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லக்ஷ்மி (Aishwarya Lekshmi) நடிப்பில் உருவாகிவரும் புது திரைப்படம்தான் கட்டா குஸ்தி 2 (Gatta Kusthi 2). இதை இயக்குநர் செல்ல அய்யாவு (Chella Ayyavu) இயக்க, வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் மற்றும் விஷ்ணு விஷாலின் தயாரிப்பு நிறுவனமும் இணைந்து தயாரித்துவருகிறது.
இப்படமானது 2022ம் ஆண்டில் வெளியான கட்டா குஸ்தி 1 படத்தின் தொடர்ச்சியான கதைக்களத்தில் தயாராகிவந்த நிலையில், இன்று (15/05/2026) இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது வெளியான இந்த போஸ்டரானது ரசிகர்களின் மத்தியில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் அமைந்த கருப்பு பட டைட்டில் கார்டு.. வைரலாகும் வீடியோ!
கட்டா குஸ்தி 2 படத்தின் முதல் பார்வை குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:
சம்பாரிக்கிறது மட்டும் வேலை இல்ல..
வீட்டை சமாளிக்கிறதும் full-time வேலை தான்..
Presenting the FIRST LOOK of #GattaKusthi2. July 3rd 2026 – family entertainment begins in theatres!
Produced by @VelsFilmIntl & @VVStudioz .
A film by @ChellaAyyavu .
An @RSeanRoldan musical.… pic.twitter.com/LietqXLm22— Vels Film International (@VelsFilmIntl) May 15, 2026
இந்த கட்டா குஸ்தி 2 படத்தில், முதல் பாகத்தில் நடித்திருந்த நடிகர்கள் கருணாஸ், முனீஸ்காந்த், காளி வெங்கட், குஷமிதா கணேஷ் என பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இவர்களுடன் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லக்ஷ்மி இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், இப்படமானது வரும் 2026 ஜூலை 3ம் தேதியில் வெளியாக தயாராகிவருகிறது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் சென் ரோல்டன் இசையமைத்துவரும் நிலையில், படத்தின் பாடல்களும் சிறப்பாக தயாராகிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தேவதாஸ் – சந்திராவை சந்திக்க தயாரா? டிசி பட ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது?
இந்த கட்டா குஸ்தி 2 படமானது பார்ட் 1 படத்திலிருந்து வித்தியாசமாக தயாராகியுள்ளதாம். இந்த படத்தில் மீண்டும் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லக்ஷ்மிக்கு இடையேயான மோதலான காட்சிகள் இடம்பெற்றுள்ளதாம். அந்த வகையில் இப்படத்தின் மீதும் ரசிகர்களிடையே எதிர்பார்ப்புகள் அதிகரித்துவருகிறது. இப்படத்தை வரும் 2026 ஆண்டு இப்படமானது வரும் 2026 ஜூலை 3ம் தேதியில் வெளியிட படக்குழு திட்டமிட்டுவருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது.