AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Karuppu: முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் அமைந்த கருப்பு பட டைட்டில் கார்டு.. வைரலாகும் வீடியோ!

Suriya Karuppu Movie: தென்னிந்திய சினிமாவில் சிறந்த நடிகராகவும், தயாரிப்பாளர்கவும் இருந்துவருபவர் சூர்யா. இவரின் நடிப்பில் கருப்பு திரைப்படமானது இன்று 2026 மே 15ம் தேதியில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் தொடக்கத்தில் தமிழக முதல்வரை விஜய்க்கு நன்றி சொல்லும் விதமாக படக்குழு, டைட்டில் கார்ட் ஒன்றை வைத்துள்ள நிலையில், இது தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

Karuppu: முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் அமைந்த கருப்பு பட டைட்டில் கார்டு.. வைரலாகும் வீடியோ!
தளபதி விஜய்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 15 May 2026 12:28 PM IST

நடிகர் சூர்யாவின் (Suriya) நடிப்பில் தமிழில் உருவாகியுள்ள பிரம்மாண்ட திரைப்படம்தான் கருப்பு (Karuppu). இந்த படமானது கடந்த 2024ம் ஆண்டில் சூர்யா45 என அறிவிக்கப்பட்டு ஷூட்டிங் தொடங்கியிருந்தது. இப்படத்தை இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி (RJ balaji) இயக்கியுள்ள நிலையில், ட்ரீம் வாரியர் பிக்ச்சர்ஸ் நிறுவனமானது தயாராரித்துள்ளது. இதில் சூர்யாவின் நடிப்பில் தயார்க்கியுள்ள நிலையில், அவருக்கு ஜோடியாக நடிகை திரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan) இணைந்து நடித்துள்ளார். இந்த ஜோடியானது இறுதியாக ஆறு என்ற படத்தில் நடித்திருந்த நிலையில், கிட்டத்தட்ட 21 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கருப்பு படத்தில் இணைந்து நடித்துள்ளனர். அந்த வகையில் இவர்கள் இருவரின் ஜோடியும் இப்படத்தில் நன்றாகவே அமைந்துள்ளது. இப்படம் நேற்று 2026 மே 14ம் தேதியிலே வெளியாகவேண்டிய நிலையில், சில நிதி பிரச்சனையின் காரணமாக இன்று 2025 மே 15ம் தேதியில் வெளியிடப்பட்டிருந்தது. காலை 9 மணி காட்சிகளுடன் திரையிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் கருப்பு படத்தின் தொடக்கத்தில் தமிழக முதலமைச்சர் தளபதி விஜய்க்கு (Tamil Nadu Chief Minister Thalapathy Vijay), நன்றி தெரிவிக்கும் விதத்தில் ஸ்பெஷல் கார்டை படக்குழு வைத்துள்ளது. அந்த வகையில் சூர்யா மற்றும் முதல்வர் விஜய் இணைந்து நடித்த நேருக்கு நேர் மற்றும் ப்ரண்ட்ஸ் பட காட்சிகளுடன் இந்த டைட்டில் கார்ட் அமைந்துள்ளது. இது தொடர்பான வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: ஷூட்டிங்கை நிறைவு செய்தது பிரபு தேவா – வடிவேலுவின் பேங் பேங் படக்குழு

முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்து கருப்பு பட தொடக்கத்தில் படக்குழு இணைந்த டைட்டில் கார்ட் குறித்த வீடியோ பதிவு:

கருப்பு பட தொடக்கத்திலே, தமிழக முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்து டைட்டில் கார்ட் அமைக்கப்பட்டுள்ளது. இந்த டைட்டில் கார்டில் சூர்யா மற்றும் முதல்வர் விஜய் இணைந்து நடித்த ப்ரண்ட்ஸ் மற்றும் நேருக்கு நேர் படங்களின் காட்சிகள் மற்றும் முதல்வர் விஜய்யின் பதவியேற்பு காட்சிகளும் இடம்பெற்றுள்ளது. அந்த டைட்டில் கார்டில் “எங்கள் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களுக்கு நன்றி” என அதில் அமைத்துள்ளது. ஏற்கனவே கருப்பு படக்குழு காலை 9 மணி காட்சிகளுக்கு அனுமதித்த முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்து பதிவுகளை ஏற்கனவே வெளியிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நீதி காக்க கோர்ட் ஏறும் கருப்பசாமி.. சூர்யாவின் கருப்பு படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ!

இந்த கருப்பு திரைப்படமானது தற்போது திரையரங்குகளில் சிறப்பான வரவேற்பை பெற்றுவருகிறது. சூர்யாவிற்கு இப்படமானது பல ஆண்டுகளுக்கு பிறகு மாஸ் மற்றும் ஆக்ஷன் காட்சிகளுடன் வெற்றி படமாக அமையும் என கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் தளபதி விஜய்யின் லியோ பட சாக்லேட் காபி காட்சிகள் ரீகிரியேட் செய்யப்பட்டுள்ளதாம். மேலும் முதல்வர் விஜய்யின் சில ரெஃபெரென்ஸ் இப்படத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் தற்போது திரையரங்குகளில் வெற்றிநடைபோட்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us