AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Ranveer Singh: ரஜினி சாரைப் பற்றி பேச நான் மிகவும் சிறியவன்.. ஆனாலும் அதை சொல்வேன் – ரன்வீர் சிங் பேச்சு!

Ranveer Singh Praises Rajinikanth : பாலிவுட் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர்தான் ரன்வீர் சிங்.இவர் தொடர்ந்து பல ஹிட் படங்ககளை கொடுத்துவருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நடந்த 56வது சர்வதேச திரைப்பட கலந்துகொண்டஇவர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். இது ரசிகர்களிடையே வைரலாகிவருகிறது.

Ranveer Singh: ரஜினி சாரைப் பற்றி பேச நான் மிகவும் சிறியவன்.. ஆனாலும் அதை சொல்வேன் – ரன்வீர் சிங் பேச்சு!
ரன்வீர் சிங் மற்றும் ரஜினிகாந்த்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 29 Nov 2025 17:10 PM IST

பான் இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் ரன்வீர் சிங் (Ranveer Singh). இவர் இந்தி சினிமாவில் உச்ச நடிகராக இருந்துவருகிறார். இவரின் நடிப்பில் விரைவில் வெளிட்டயீட்டிற்கு காத்திருக்கும் திரைப்படம்தான் துரந்தர் (Dhurandhar). இந்த படமானது மிக பிரம்மாண்ட ஆக்ஷ்ன் கதையில் தயாராகியுள்ள நிலையில், வரும் 2025 டிசம்பர் 5ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் ரன்வீர் சிங்கிற்கு ஜோடியாக தமிழில் தெய்வ திருமகன் படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரமான சாரா அர்ஜுன் (Sara Arjun) நடித்துள்ளார். இந்த படமானது முழுவதும் அதிரடி ஆக்ஷ்ன் கதையில் தயாராகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைராலகையிருந்தது.

இந்நிலையில் இவர் சமீபத்தில் நடந்த 56வது சர்வதேச திரைப்பட விருது (56th International Film Awards Of India) வழங்கும் விழாவில் கலந்துகொண்டார். இந்த விழாவில் கலந்துகொண்ட இவர் மேடையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth) குறித்து பெருமையாக பேசியுள்ளார். இது தொடர்பான தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: தேரே இஸ்க் மெய்ன் படத்தின் வசூல் எவ்வளவு? அப்டேட் இதோ

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து பெருமையாக பேசிய ரன்வீர் சிங்:

அந்த நிகழ்ச்சியின்போது பேசிய நடிகர் ரன்வீர் சிங், “இவ்வளவு பேசிய மகத்துவமான நடிகரை பற்றி வார்த்தைகளை பேசுவதற்கு நான் மிகவும் சிறியவன். ஆனால் என்னால் ஒன்று சொல்லமுடியும், எது என்னவென்றால் ஜெயிலர் 2 திரைப்படத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்” என கூறினார். இதை கூறியதும் நடிகர் ரன்வீர் சிங், “ஹுக்கும் டைகர்கா ஹுக்கும்” என அதில் பேசியிருந்தார். இது தொடர்பான வீடியோ ரஜினிகாந்தின் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

ரஜினிகாந்த் குறித்து ரன்வீர் சிங் பேசிய வீடியோ பதிவு:

நேற்று 2025, நவம்பர் 28ம் தேதியில் கோவாவில் 56வது சர்வதேச திரைப்பட விருதுவளா நடைபெற்றிருந்தது. இந்த விழாவில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சினிமாவில் 50 ஆண்டுகள் நிறைவை ஒட்டி அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: ‘பெரும் சேனை ஒன்று தேவை’… பராசக்தி பட டப்பிங் பணியை தொடங்கிய சிவகார்த்திகேயன்!

இந்த நிகழ்ச்சியில் தமிழ் மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதத்திலும் ரஜினிகாந்த் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு இந்த விருது கிடைத்திருக்கும் நிலையில், அரசியல் முதல் சினிமா பிரபலங்கள் பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த விருது ரஜினிக்கு கிடைத்திருந்த நிலையில் ரசிகர்களும் உற்சாகமலா உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us