Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Sivakarthikeyan: ‘பெரும் சேனை ஒன்று தேவை’… பராசக்தி பட டப்பிங் பணியை தொடங்கிய சிவகார்த்திகேயன்!

Sivakarthikeyan Parasakthi Movie Dubbing: நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக தயாராகியுள்ள படம்தான் பராசக்தி. இந்த படமானது வரும் 2026ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதியில் வெளியாகிறது. இந்நிலையில் படத்தின் டப்பிங் பணியை சிவகார்த்திகேயன் தொடங்கியதாக அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Sivakarthikeyan: ‘பெரும் சேனை ஒன்று தேவை’… பராசக்தி பட டப்பிங் பணியை தொடங்கிய சிவகார்த்திகேயன்!
சிவகார்த்திகேயன்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 28 Nov 2025 18:34 PM IST

தமிழ் சினிமாவில் தற்போது பிரபல நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan. இவரின் நடிப்பில் மொத்தம் இதுவரை 23 படங்கள் வெளியாகியிருக்கிறது. அந்த வகையில் இவரின் நடிப்பில் SK25 என அறிவிக்கப்பட்ட திரைப்படம்தான் பராசக்தி (Parasakthi). இந்த திரைப்படத்தை பிரபல பெண் இயக்குநர் சுதா கொங்கரா (Sudha Kongara) இயக்கியுள்ள நிலையில் டான் பிக்ச்சர்ஸ் (Dawn Pictures) நிறுவனத்தின் கீழ் ஆகாஷ் பாஸ்கரன் (Aakash Baskaran) தயாரித்துவருகிறார். இவர் துணை முதல்வன் உதயநிதி ஸ்டலினின் நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படமானது திராவிடம் மற்றும் இந்தி மொழி திணிப்பு எதிர்ப்பு தொடர்பான கதைக்களத்தில் தயாராகியுள்ளது. இதில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா (Sreeleela) நடித்துள்ளார். இது இவரின் முதல் தமிழ் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் (GV. Prakash Kumar) இசையமைத்துவரும் நிலையில், இதுவரை 2 பாடல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டப்பிங் பணியை நடிகர் சிவகார்த்திகேயன் தொடங்கியுள்ளார். இது தொடர்பான அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: வியானாவை விட வர்ஸ்ட் பர்ஃபாமரா வினோத்? சிறை செல்லும் FJ – வினோத்.. ரசிகர்கள் அதிருப்தி

பராசக்தி படத்தின் டப்பிங்ப் பணியை சிவகார்த்திகேயன் தொடங்கியது குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு :

நடிகர் சிவகார்த்திகேயனின் 25வது படமாக இந்த பராசக்தி உருவாகிவரும் நிலையில், மிகவும் பிரம்மாண்டமாக தயாராகிவருகிறது. இந்த படத்தின் டப்பிங் பணியை ஏற்கனவே நடிகர்கள் ரவி மோகன், ஸ்ரீலீலா, அதர்வா போன்ற நடிகர்கள் தொடங்கிய நிலையில், தற்போது சிவகார்த்திகேயனும் தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

பராசக்தி திரைப்படத்தின் பட்ஜெட்

இந்த பராசக்தி படத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், ஸ்ரீலீலா, ரவி மோகன், அதர்வா, பேசில் ஜோசப், ராணா டகுபதி, சோமசுந்தரம் மற்றும் பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். சிவகார்த்திகேயனின் நடிப்பில் 2வது வெளியாகும் பயோ பிக் திரைப்படமாகும். இது கடந்த 1960 ஆண்டில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாம்.

இதையும் படிங்க: சினிமாவில் 50 ஆண்டுகள் நிறைவு… சர்வதேச திரைப்பட விழாவில் ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ பெரும் ரஜினிகாந்த்!

இந்த படத்தை டான் பிக்ச்சர்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் ஷூட்டிங் தமிழ்நாடு மற்றும் இலங்கை போன்ற இடங்களில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றிருந்தது. இந்நிலையில் இந்த படமானது சுமார் ரூ 100 முதல் 120 கோடிகள் பொருட்செலவில் இப்படம் தயாராகியுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.