வியானாவை விட வர்ஸ்ட் பர்ஃபாமரா வினோத்? சிறை செல்லும் FJ – வினோத்.. ரசிகர்கள் அதிருப்தி
BB 9 Worst Performer Of The Week: இந்த பிக்பாஸ் சீசன் 9 தமிழ் நிகழ்ச்சியானது தொடங்கி இன்றுடன் 54 நாட்களை கடந்துள்ளது. இந்த நிகழ்ச்சியானது விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், இன்று வெளியான ப்ரோமோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது. இதில் FJ, வினோத் சிறை செல்லும் நிலையில், மக்களிடையே கேள்விகள் எழுந்துவருகிறது.
மக்களிடையே தற்போது பிரபலமாகிவரும் நிகழ்ச்சிதான் பிக் பாஸ் சீசன் 9 தமிழ் (Bigg Boss Season 9 Tamil). இந்த நிகழ்ச்சியானது தொடங்கி கிட்டத்தட்ட 4 வாரங்கள் வரை ரசிகர்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்களை பெற்றுவந்தது. பின் இந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் நுழைந்த நிலையில், கொஞ்சம் கொஞ்சமாக மற்ற போட்டியாளர்களிடையே சண்டை அதிகமாக இருந்தது என்றே கூறலாம். மொத்தம் 20 போட்டியாளர்கள் மற்றும் 4 வைல்ட் கார்ட் எண்டரியுடன் நடந்து வந்த இந்த நிகழ்ச்சியில் தற்போது 16 போட்டியாளர்கள் மட்டுமே இருக்கிறார்கள். இந்நிலையில் இந்த வாரத்திற்கான சிறப்பு டாஸ்காக “பிக் பாஸ் ஸ்கூல்” (Bigg Boss School) என்ற புதிய டாஸ்க் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த டாஸ்க்கிலும் பல பிரச்னைகள் எழுந்துவந்து என்றே கூறலாம். இந்நிலையில் வார இறுதியான நிலையில், இந்த வாரத்திற்கான பிக் பாஸ் வர்ஸ்ட் பர்ஃபாமர் (Worst performer) யார் என தேர்வு செய்ய அறிவிக்கப்பட்டிருந்து.
இதன் காரணமாக போட்டியாளரால் அனைவரும் கானா வினோத் (Gana Vinoth) மற்றும் FJ-வை தேர்ந்தெடுத்துள்ளனர். இவர்கள் இருவரும் இந்தவார வர்ஸ்ட் பர்ஃபாமர் என்ற நிலையில் பிக் பாஸ் சிறைக்கு செல்வார்கள். இது தொடர்பான ப்ரோமோ வீடியோவில் வினோத், வியானாவை (Viyanaa) விடவும் நான் வர்ஸ்ட் பர்ஃபாமரா? என கேள்வி எழுப்பிய நிலையில், ரசிகர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.




இதையும் படிங்க: ஒரு டார்க் காமெடி கதையில்… கீர்த்தி சுரேஷின் ரிவால்வர் ரீட்டா படம் எப்படி இருக்கு?
இணையத்தில் வைரலாகும் பிக்பாஸ் சீசன் 9 தமிழ் ப்ரோமோ :
#Day54 #Promo3 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 9 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason9 #OnnumePuriyala #BiggBossSeason9Tamil #BiggBoss9 #BiggBossSeason9 #VijaySethupathi #BiggBossTamil #BB9 #BiggBossSeason9 #VijayTV #VijayTelevision pic.twitter.com/KOhTBgz6KA
— Vijay Television (@vijaytelevision) November 28, 2025
இந்த வீடியோவில் இந்த வார வர்ஸ்ட் பர்ஃபாமர் தேர்வு நடைபெறுவது போல் இருக்கிறது. இதில் பிரஜினை தவிர அனைவரும் FJ மற்றும் வினோத்தை ஓர்ஸ்ட் பர்ஃபாமர் என தேர்வு செய்திருந்தனர். இதில் வினோத் வியானவை ஒப்பீடு பேசியிருந்தார். இந்த வாரத்தில் வியானா அந்த அளவிற்கு எந்த டாஸ்க்கிலும் ஈடுபடவில்லை. வினோத்திற்கு பதிலாக வியானாதான் சிறைக்கு செல்லவேண்டும் என ரசிகர்கள் வினோத்திற்கு ஆதரவு தெரிவித்துவருகின்றனர்.
இதையும் படிங்க: பிக் பாஸ் மியூசியம்.. மலரும் பழைய போட்டியாளர்களின் நினைவு.. வைரலாகும் ப்ரோமோ இதோ!
இந்த பிக்பாஸ் சீசன் 9 தமிழில் மற்ற போட்டியாளர்களை ஒப்பிடும்போது வினோத் நன்றாகவே விளையாடிவருகிறார். இதனால் இவருக்கு மக்கள் மத்தியில் ஆதரவு இருந்துவரும் நிலையில், இந்த வார வர்ஸ்ட் பர்ஃபாமராக வினோத்தை தேர்வு செய்ததற்கு தங்களின் ஆதரவு குரலை இணையத்தில் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.