Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பிக் பாஸ் மியூசியம்.. மலரும் பழைய போட்டியாளர்களின் நினைவு.. வைரலாகும் ப்ரோமோ இதோ!

Bigg Boss Season 9: தமிழில் கடந்த 2025 அக்டோபர் மாதம் தொடக்கம் முதல் ஆரம்பமான நிகழ்ச்சிதான் பிக்பாஸ் சீசன் 9 தமிழ். இந்த நிகழ்ச்சியானது தொடங்கி 54 நாட்களான நிலையில், பிக்பாஸ் ஸ்கூல் டாஸ்கில் இன்று புதுவிதமான டாஸ்க்குடன் வெளியான ப்ரோமோ வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

பிக் பாஸ் மியூசியம்.. மலரும் பழைய போட்டியாளர்களின் நினைவு.. வைரலாகும் ப்ரோமோ இதோ!
பிக் பாஸ் 54வது நாள் ப்ரோமோ
Barath Murugan
Barath Murugan | Published: 28 Nov 2025 11:46 AM IST

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) தமிழில் தொகுத்துவரும் ரியாலிட்டி நிகழ்ச்சிதான் பிக் பாஸ் சீசன் 9 தமிழ் (Bigg Boss Season 9 Tamil). இவர் கடந்த 2024ம் ஆண்டில் வெளியான பிக் பாஸ் 8 தமிழ் நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக அறிமுகமானார். இதற்கு முன் பிக்பாஸ் 7 வரை நடிகர் கமல்ஹாசன் (Kamal Haasan) தொகுத்து வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பிக் பாஸ் சீசன் 9 தமிழ் நிகழ்ச்சியானது கடந்த 2025 அக்டோபர் 5ம் தேதி முதல் தொடங்கிய நிலையில், இன்று 2025 நவம்பர் 28ம் தேதியுடன் மொத்தமாக 54 நாட்களை கடந்துள்ளது. மற்ற சீசன்களை ஒப்பிடும்போது, இந்த சீசன் 9 தமிழிக்கு வரவேற்புகள் குறைவாகத்தான் இருக்கிறது. மேலும் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் நடந்துகொள்ளும் விதமும் மக்களிடையே விமர்சிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 7 வது வாரம் நடந்துவரும் நிலையில், இந்த வீட்டில் தற்போது பிக் பாஸ் ஸ்கூல் (Bigg Boss School) என்ற டாஸ்க் நடைபெற்று வருகிறது.

இதிலும் பல்வேறு பிரச்சனைகள் நடந்துவரும் நிலையில், இன்று இந்த டாஸ்கிலே புதுமையான விஷயம் ஒன்று வந்துள்ளது. அது என்னவென்றால், இதுவரை நடந்த சீசன்களில் உள்ள போட்டியாளர்களின் மறக்கமுடியாத தருணங்கள் குறித்த ப்ரோமோ வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: கோமாளி படத்தின் கதையை இப்படித்தான் எழுதினேன்… – பிரதீப் ரங்கநாதன் பகிர்ந்த விஷயம்!

பிக் பாஸ் சீசன் 9 தமிழ் 54வது நாளில் முதல் ப்ரோமோ வீடியோ பதிவு :

இந்த ப்ரோமோவில் பிக் பாஸ் மியூசியம் என புது டாஸ்க் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த டாஸ்கில் இந்த சீசனில் இதுவரை நடந்த மிக முக்கியமான சம்பவம் குறித்த புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளது. அந்த புகைப்படங்களை, பிக் பாஸ் ஸ்கூல் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் எடுத்துரைக்கும் விதத்தில், இந்த டாஸ்க் அமைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 16 ஆண்டுகளை நிறைவு செய்த யோகி படம்… நடிகர் யோகிபாபு வெளியிட்ட உருக்கமான பதிவு

அதில் கடந்த 8 சீசனில் நடந்த ஜாக்குலின் பணப்பெட்டி வெளியேற்றம் குறித்தும், பிக் பாஸ் சீசன் 1ல் ஜூலி மற்றும் ஓவியா இருவருக்கும் நடந்த தகராறு குறித்த சம்பவம் குறித்து கனி திரு கூறுவது போன்ற காட்சிகள் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் இன்றைய பிக்பாஸ் சீசன் 9 தமிழ் நிகழ்ச்சியானது சுவாரஸ்யமாகவும், மிகவும் வித்தியாசமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த வாரத்தின் நாமினேஷனில் யார் வெளியேறுவார் என ரசிகர்கள் எதிர்பார்க்க தொடங்கிவிட்டனர்.