கட்டா குஸ்தி 2 முதல் டார்க் வரை… தமிழ் சினிமாவில் இந்த வாரம் வெளியாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
From Gatta Kusthi 2 to Dark this week theatre release movies list here | தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் புதுப் புதுப் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வருகின்றது. அந்த வரிசையில் இந்த வாரம் வெளியாகும் படங்களின் லிஸ்ட் இதோ.
கட்டா குஸ்தி 2 படம்: பொதுவாக பாலிவுட் சினிமவில் தான் தொடர்ந்து ஒரு படத்திற்கு 4 அல்லது 5 பாகங்கள் எல்லாம் வெளியாவது வழக்கமாக இருந்தது. ஆனால் தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளிலும் சீக்குவல் பாணியில் படங்கள் வெளியாவது சமீப காலமாக அதிகரித்து வருகின்றது. அந்த வரிசையில் இந்த 2026-ம் ஆண்டில் தமிழ் சினிமாவில் கட்டா குஸ்தி 2, சர்தார் 2 மற்றும் ஜெயிலர் 2 ஆகியப் படங்கள் அடுத்தடுத்து திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது. இந்த நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் நாயகனாக நடித்து உள்ள கட்டா குஸ்தி 2 படம் முதலாவதாக வெளியாக உள்ளது. இயக்குநர் செல்ல அய்யாவு எழுதி இயக்கிய இந்தப் படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடித்து உள்ளார்.
ஸ்போர்ஸ்ட் ட்ராமா பாணியில் உருவாகி உள்ள இந்தப் படத்தில் அவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படத்தில்ற்கு இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள நிலையில் படம் நாளை 03-ம் தேதி ஜூலை மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது.
இரு முனை படம்: இயக்குநர் கிரி பாபு எழுதி இயக்கி நாயகனாக நடித்து உள்ள படம் இரு முனை. இந்தப் படத்தில் சஜினி பாண்டி நாயகியாக நடித்து உள்ள நிலையில் அவருடன் இணைந்து நடிகர்கள் அலிசன் வசந்த், ரஜினி பாண்டி மற்றும் மதுமிதா வசந்த் ஆகியோர் நடித்து உள்ளனர். ஃபேமிலி செண்டிமெண்ட் த்ரில்லர் பாணியில் உருவான இந்தப் படம் நாளை 03-ம் தேதி ஜூலை மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது.




Also Read… ஜேசன் சஞ்சயை ஸ்கூல் படிக்கும் போது கடத்திய நடிகர் – வைரலாகும் வீடியோ!
டார்க் படம்: இயக்குநர் கல்யான் கே ஜெகன் எழுதி இயக்கி உள்ள படம் டார்க். இந்தப் படத்தில் நடிகர் அஜய் கார்த்தி நாயகனாக நடித்து உள்ள நிலையில் அவருடன் இணைந்து நடிகர்கள் அஞ்சனா நேத்ருன், நட்ராஜ் சுப்ரமணி (நட்டி), கே.பாக்யராஜ், சிபி சக்ரவர்த்தி, விடிவி கணேஷ், அரவிந்த், ஷாகுல், நரேன் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவான இந்தப் படம் நாளை 03-ம் தேதி ஜூலை மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது.
Also Read… இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு செக் வைத்த டெல்லி உயர் நீதிமன்றம்