Atharvaa: அப்பா இறந்த பிறகு.. அந்த விஷயத்தில் ரொம்ப கஷ்டப்பட்டேன் – அதர்வா பகிர்ந்த விஷயம்!
Atharvaa Muralis Career: தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகரின் மகனாக இருந்து, தற்போது லீட் நடிகராக படங்களில் நடித்துவருபவர் அதர்வா முரளி. இவர் முன்பு நேர்காணல் ஒன்றில், தனது தந்தையும், நடிகருமான முரளியின் இறப்பிற்கு பின் சந்தித்த துயரங்கள் குறித்து பேசியிருக்கிறார். அது குறித்து விவரமாக பார்க்கலாம்.
கோலிவுட் சினிமாவில் பிரபலமான இளம் நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் அதர்வா முரளி (Atharvaa Murali). இவர் தமிழ் 80ஸ் மற்றும் 90ஸ் நடிகரான முரளியின் (Murali) மூத்த மகன் ஆவார். இவர் தனது தந்தையை போலவே சினிமாவில் நடிக்கவேண்டும் என் சிறுவயதிலிருந்து ஆசைப்பட்டிருந்த நிலையில், இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் 2009ம் ஆண்டில் வெளியான பானா காத்தாடி (Baana Kaathadi) ஏன்டா படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகியிருந்தார். இந்த படத்தில் அவர் நடிகை சமந்தாவிற்கு (Samantha) ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த் படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் அதர்வாவுக்கு தமிழ் சினிமாவில் தொடர்ந்து படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தது. இதுவரை அவர் கிட்டத்தட்ட 25-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
அந்த விதத்தில் இவரின் நடிப்பில், 2026ம் ஆண்டு மட்டுமே இதயம் முரளி (Idhayam Murali) மற்றும் வலை (Valai) என இரு படங்கள் வெளியாகிறது. இந்நிலையில் முன்பு பேட்டி ஒன்றில் பேசியிருந்த அதர்வா, தந்தை முரளியின் இறப்பிற்கு பின் சினிமாவில் தான் சந்தித்த இன்னல்கள் மற்றும் வாழ்க்கையில் சந்தித்த கஷ்டங்கள் குறித்து பேசியுள்ளார். அது குறித்து விவரமாக பார்க்கலாம்.




இதையும் படிங்க: சுவாரஸ்யமான சைபர் க்ரைம் வெப் சீரிஸ் பார்க்கணுமா? ஓடிடியில் வெளியாகி உள்ள இந்த பிரீதம் அண்ட் பெட்ரோ தொடரை மிஸ் செய்யாதீர்கள்
தந்தை முரளியின் இறப்பிற்கு பின் சந்தித்த கஷ்டங்கள் குறித்து அதர்வா சொன்ன விஷயம் :
அந்த இன்டெர்வியூவில் பேசிய அதர்வா, “என்னோட முதல் படம் (பானா காத்தாடி) வெளியாகி கிட்டத்தட்ட ஒரு வாரத்தில் எனது தந்தையை (முரளி) இழந்துவிட்டேன். இதற்கு அடுத்தது என்ன என்பது எனக்கு சுத்தமாக தெரியவில்லை. அப்பாவின் இறப்பிற்கு முன், ஒவ்வொரு முடிவையும் எனது அப்பாவிடம் கேட்டு கேட்டுத்தான் எடுப்பேன்.
இதையும் படிங்க: இப்படிப்பட்ட உணர்ச்சிகள் வரும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை – கண்ணீர்மல்க பேசிய ஐஸ்வர்யா லெக்ஷ்மி!
நான் மட்டும் இல்ல, எங்கள் வீட்டில் எல்லோருமே அப்படித்தான். அவரின் இறப்பிற்கு பின் அந்த விஷயம் எனக்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. ஒவ்வொரு படம் பண்ண பிறகு, அது எப்போது வெளியாகவும் என்ற ஒரு காத்திருப்பு இருக்கும் அது மிகவும் பயமாக இருக்கும் எனக்கு” அந்த அதில் அதர்வா தெரிவித்திருந்தார்.
இதயம் முரளி திரைப்படம் குறித்து நடிகர் அதர்வா பகிர்ந்த எக்ஸ் பதிவு:
Every journey has its moments ..
Here we go .. 🤍
#IdhayamMurali trailer
In theaters from JULY 10th 2026..@MusicThaman @AakashBaskaran #FahadhFaasil @RedGiantMovies_ @natty_nataraj @PreityMukundan @JustNiharikaNm @11Lohar @manojdft @Dop_Sai @RakshanVJ @Actor__SUDHAKAR…
— Atharvaa (@Atharvaamurali) July 4, 2026
நடிகர் அதர்வாவின் புது படங்கள்:
நடிகர் அதர்வாவின் நடிப்பில் தொடர்ந்து புது படங்கள் வெளியாகிவருகிறது. அவரின் நடிப்பில் 2026ம் ஆண்டில் மட்டும் கிட்டத்தட்ட 2 படங்கள் வெளியாகிறதாம். இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் இதயம் முரளி என்ற காதல் படம் வெளியாகிறது. பின் நான் பட இயக்குநர் ஜீவா சங்கர் இயக்கத்தில் வலை என்ற கேங்ஸ்டர் படம் ஒன்று உருவாகிவருகிறது. இதுவும் 2026ம் ஆண்டில் வெளியாகிறது. மேலும் இவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் புது படத்தில் இணைவதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இப்படங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.