AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

உறுதியாகும் ஜன நாயகன் பட ரிலீஸ்… ஒத்திவைக்கப்படும் மற்றப்படங்களின் ரிலீஸ்!

Jana Nayagan Movie Release Confirmed | தமிழ் சினிமாவில் மக்கள் மிகவும் எதிர்பார்த்து காத்து இருந்த ஜன நாயகன் படத்தின் ரிலீஸ் உறுதி செய்யப்பட்ட நிலையில் மற்ற தமிழ் படங்களின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

உறுதியாகும் ஜன நாயகன் பட ரிலீஸ்… ஒத்திவைக்கப்படும் மற்றப்படங்களின் ரிலீஸ்!
ஜன நாயகன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 10 Jul 2026 11:01 AM IST

தமிழ் சினிமாவில் இந்த 2026-ம் ஆண்டில் மக்கள் அதிக அளவில் எதிர்பார்த்து காத்திருந்த படம் ஜன நாயகன். நடிகர் தளபதி விஜய் அரசியலில் முழு நேரமும் கவனம் செலுத்த முடிவு செய்த பிறகு இனி படங்களில் நடிக்க மாட்டேன் என்று அவர் வெளிப்படையாக தெரிவித்தார். அதன்படி அவரது நடிப்பில் இறுதியாக உருவாகும் படமாக ஜன நாயகன் படம் அறிவிக்கப்பட்டது. இந்த ஜன நாயகன் படத்தை இயக்குநர் எச்.வினோத் எழுதி இயக்கி உள்ளார். பிரபல தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரடெக்‌ஷன்ஸ் தயாரித்து உள்ளது. தெலுங்கு சினிமாவில் பிரபல தயாரிப்பு நிறுவனமாக உள்ள இது தமிழ் சினிமாவில் ஜன நாயகன் படத்தின் மூலமாகவே தமிழ் சினிமாவில் படங்களை தயாரிக்க தொடங்கியது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்தப் படங்கள் தயாரித்து வருகின்றது.

கேவிஎன் புரடெக்‌ஷன் தமிழ் சினிமாவில் முதன்முறையாக தயாரிக்கப்பட்ட ஜன நாயகன் படம் கடந்த ஜனவரி மாதம் 2026-ம் ஆண்டே திரையரங்குகளில் வெளியாவதாக இருந்தது. ஆனால் படம் ரிலீஸ் சென்சார் சான்றிதழ் கிடைக்காத காரணத்தால் ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து 6 மாதங்களுக்குப் பிறகு சென்சார் பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

உறுதியாகும் ஜன நாயகன் பட ரிலீஸ்:

‘ஜன நாயகன்’ திரைப்படம் ஜூலை 24-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியாகவுள்ள நிலையில், பல தமிழ் திரைப்படங்கள் தாங்கள் ஏற்கனவே அறிவித்திருந்த வெளியீட்டுத் தேதிகளிலிருந்து பின்வாங்கி வருகின்றன. ஜி.வி. பிரகாஷின் இம்மார்டல் திரைப்படம் ஜூலை 23-ல் வெளியாகவிருந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்டு, புதிய தேதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. லோகேஷின் ‘DC’ மற்றும் சந்தீப் கிஷனின் ‘சிங்கம்’ ஆகிய படங்கள் ஜூலை 31-ல் வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தன; ஆனால், அப்படம் இரண்டுமே வேறு தேதிகளுக்கு மாற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அன்பே டயானா திரைப்படம் தற்போது ஜூலை 17-ஆம் தேதி வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது.

Also Read… அல்லு அர்ஜுன் – லோகேஷ் கனகராஜ் படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்குகிறது? வைரலாகும் தகவல்

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… தனுஷ் ரசிகர் மன்ற கொடி விவகாரம் – விளக்கம் அளித்த சுப்ரமணிய சிவா

Follow Us