AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

அன்பே சிவம் போன்ற படங்களை மீண்டும் இயக்காததற்கு இதுதான் காரணம் – இயக்குநர் சுந்தர் சி ஓபன் டாக்

Director Sundar C About Anbe Sivam Movie | தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராகவும் நடிகராகவும் வலம் வருபவர் சுந்தர் சி. இவர் சமீபத்தில் அன்பே சிவம் படம் குறித்து பேசியது இணையத்தில் ரசிகர்களிடையே அதிக அளவில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

அன்பே சிவம் போன்ற படங்களை மீண்டும் இயக்காததற்கு இதுதான் காரணம் – இயக்குநர் சுந்தர் சி ஓபன் டாக்
சுந்தர் சிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 14 Nov 2026 13:45 PM IST

தமிழ் சினிமாவில் கடந்த 1990களில் படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தவர் சுந்தர் சி (Sundar C). இவர் நடிகரும் இயக்குநருமான மணிவண்ணனிடம் உதவி இயக்குநராக பணியாற்றி பிறகு தமிழ் சினிமாவில் இயக்குநராக தனது சினிமா பயணத்தை தொடங்கினார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களை இயக்கி வந்த இயக்குநர் சுந்தர் சி கடந்த 2006-ம் ஆண்டு முதல் தமிழ் சினிமாவில் நாயகனாகவும் நடிக்கத் தொடங்கினார். தொடர்ந்து இயக்குநராகவும் நாயகனாகவும் தமிழ் சினிமாவில் பிசியாக வலம் வரும் சுந்தர் சி இயக்கத்தில் இறுதியாக தமிழ் சினிமாவில் வெளியான படம் மூக்குத்தி அம்மன் 2. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே அதிக அளவில் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்த நிலையில் சமீபத்தில் சுந்தர் சி அன்பே சிவம் படம் குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தற்போது உள்ள தலைமுறையினர் சுந்தர் சியை அரண்மணை படத்தினை வைத்தே அடையாளப்படுத்தி வரும் நிலையில் அன்பே சிவம் போன்ற ஒரு கல்ட் படத்தை இயக்கியது அவர்தான் என்று கூறினல் அவர்கள் நம்ப மறுப்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் அவ்வாற படங்களை இயக்காதது ஏன் என்று சுந்தர் சி பேசியது வைரலாகி வருகின்றது.

Also Read… தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம்… இந்த வாரம் தென்னிந்திய மொழிகளில் வெளியாகும் படங்களின் லிஸ்ட் இதோ!

அன்பே சிவம் போன்ற படங்களை மீண்டும் இயக்காததற்கு இதுதான் காரணம்:

Also Read… Anirudh Wedding: ஓ பெண்ணே பெண்ணே… அனிருத் – காவியா மாறனின் கிரீஸ் திருமண போட்டோ கிளிக்ஸ்!

Follow Us