AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம்… இந்த வாரம் தென்னிந்திய மொழிகளில் வெளியாகும் படங்களின் லிஸ்ட் இதோ!

This Week Theatre Release Movies List Here | தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் இந்த வாரம் திரையரங்குகளில் வரிசையாக படங்கள் வெளியாக உள்ளது. அந்த படங்களின் பட்டியல் என்ன என்ன என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம்… இந்த வாரம் தென்னிந்திய மொழிகளில் வெளியாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
படங்கள்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 12 Nov 2026 16:55 PM IST

ஜான் டே படம்: தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆகி தற்போது தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் அர்ஜுன் தாஸ். இவர் வில்லனாக தமிழ் சினிமாவில் பிரபலம் ஆகி இருந்தாலும் தொடர்ந்து பல கதாப்பாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். மேலும் நடிகர் அர்ஜுன் தாஸ் நாயகனாக நடித்து தற்போது தமிழ் மொழியில் உருவாகி உள்ள படம் ஜான் டே. இந்தப் படத்தை இயக்குநர் மதுமிதா எழுதி இயக்கி உள்ளார். இந்தப் படத்தில் நடிகர் அர்ஜுன் தாஸ் உடன் இணைந்து நடிகர்கள் சஞ்சனா நடராஜன், சிருஷ்டி, அனுபமா குமார், அர்ச்சனா சந்தோக், படவா கோபி, ஜாரா வினீத் சந்தோக் மற்றும் நீரவ் எஸ் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். மேலும் இந்தப் படம் நாளை 13ம் தேதி நவம்பர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

டைட்டானிக் படம்: நடிகர் கலையரசன் நாயகனாக நடித்து கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு உருவான படம் டைட்டானிக். இந்தப் படத்தினை இயக்குநர் எம்.ஜானகிராமன் எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் கலையரசன் உடன் இணைந்து நடிகர்கள் கயல் ஆனந்தி, காளி வெங்கட், ஆஷ்னா ஜவேரி, ராகவ் விஜய், மதுமிதா, சேத்தன், தேவதர்ஷினி உட்பட சிறப்புத் தோற்றத்தில் இயக்குனர் பாலாஜி மோகன் மற்றும்  நடிகை காயத்ரி ஆகியோர் நடித்து உள்ளனர். இந்தப் படம் நாளை 13ம் தேதி நவம்பர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

பிளாக் கோல்ட் திரைப்படம்: இயக்குநர் தீரன் அருண்குமார் எழுதி இயக்கி உள்ள படம் பிளாக் கோல்ட். இந்தப் படத்தில் நடிகர் வெற்றி நாயகனாக நடித்து உள்ள நிலையில் அவருடன் இணைந்து நடிகர்கள் பிரியாலயா, லிவிங்ஸ்டன், அபிராமி வெங்கடாசலம், ஏ. வெங்கடேஷ், ராமர், அருள் டி சங்கர், சபிதா ராய் மற்றும் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் நாளை 13ம் தேதி நவம்பர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… Anirudh: வெற்றிமாறனின் அரசன் திரைப்படத்தில் அனிருத் இல்லையா? இதுதான் காரணமா?

இத்தில்யு அர்ஜுனா திரைப்படம்: தெலுங்கு சினிமாவில் இயக்குநர் மகேஷ் உப்பலா எழுதி இயக்கி உள்ள படம் இத்தில்யு அர்ஜுனா. இந்தப் படத்தில் நடிகர் அனீஷ் நாயகனாக நடித்து உள்ள நிலையில் நடிகை அனஸ்வரா ராஜன் நாயகியாக நடித்து உள்ளார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் வெண்ணெல கிஷோர், முகேஷ் ரிஷி, கலையரசன் ஹரிகிருஷ்ணன், இளங்கோ குமரவேல், பிரம்மாஜி, கெட்அப் ஸ்ரீனு, ரகு பாபு, அருணா பிக்ஷு, மைம் கோபி, பிரவீணா லலிதாபாய், ரோஹன் ராய் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். இந்தப் படம் நாளை 13ம் தேதி நவம்பர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

மெல்கோ பாண்டிச்சேரி திரைப்படம்: மலையாள சினிமாவில் இயக்குநர் நிகில் மோகன் எழுதி இயக்கி உள்ள படம் மெல்கோ பாண்டிச்சேரி. இந்தப் படத்தில் நடிகர் அர்ஜுன் அசோகன் நாயகனாக நடித்து உள்ள நிலையில் அவருடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். மேலும் இந்தப் படம் நாளை 13ம் தேதி நவம்பர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… Scene: முரட்டு வசூல்… 5 நாட்களில் சூர்யாவின் சீன் திரைப்படத்தின் உலகளாவிய கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா?

Follow Us