AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

நடிகர் தனுஷின் ஓம் படத்தின் சென்சார் அப்டேட் இதுதானா? இணையத்தில் வைரலாகும் தகவல்!

OM Movie Censor Update Here | தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வரும் நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ஓம். இந்தப் படத்தின் சென்சார் தொடர்பான தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நடிகர் தனுஷின் ஓம் படத்தின் சென்சார் அப்டேட் இதுதானா? இணையத்தில் வைரலாகும் தகவல்!
ஓம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 15 Nov 2026 08:35 AM IST

தமிழ் சினிமாவில் இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகனாக ரசிகர்களிடையே அறிமுகம் ஆனாவர்தான் நடிகர் தனுஷ் (Actor Dhanush). இவரும் இவரது அண்ணன் செல்வராகவனும் சினிமாவில் ஒரே நேரத்தில் அறிமுகம் ஆனது குறிப்பிடத்தக்கது. குடும்பத்தினரின் கட்டாயத்தின் பேரில் சினிமாவில் நாயகனாக நடிக்க வந்து தற்போது ஹாலிவுட் வரை பிரபலமான ஒரு நடிகராக நடிகர் தனுஷ் வலம் வருவது குறிப்பிடத்தக்கது. இவர் சினிமாவில் நாயகனாக அறிமுகமான ஆரம்ப காலக்கட்டத்தில் பல நெகட்டிவ் விமர்சனங்களை எதிர்கொண்டாலும் தற்போது தனது நடிப்பு திறமையின் காரணமாக உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் நாயகனாக மட்டும் இன்றி சினிமாவில் பல துறைகளில் சாதனைப் படைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பிசியான நாயகனாக வலம் வரும் இவரது நடிப்பில் படங்கள் வரிசையாக வெளியாகி வருகின்றது.

அதன்படி நடிகர் தனுஷ் நடிப்பில் தமிழ் சினிமாவில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ஓம் ஆப்ரேஷன் மோல். இந்தப் படத்திற்கு முன்னதாக ஓம் சாப்டர் ஒன் என்று பெயர் வைக்கப்பட்ட நிலையில் சென்சார் குழுவின் அறிவுறுத்தலுக்குப் பிறகு பெயர் மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் படத்தின் ட்ரெய்லர் வெளியான போது இந்த அப்டேட் தெரியவந்ததும் குறிப்பிடத்தக்கது.

நடிகர் தனுஷின் ஓம் படத்தின் சென்சார் அப்டேட் இதுதானா?

படம் வருகின்ற 20-ம் தேதி நவம்பர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தொடர்ந்து படம் தொடர்பான அப்டேட்கள் வெளியாகி ரசிகரக்ளிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. அந்த வகையில் சமீபத்தில் சினிமா வட்டாரங்களில் வெளியான தகவலின்படி இந்த ஓம் ஆப்ரேஷன் மோல் என்ற படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கி உள்ளதாக தெரிகின்றது.  ஆனால் இதுவரை படக்குழு இதுகுறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்டை வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Also Read… ஓடிடி ரிலீஸ் தேதியை லாக் செய்தது அன்பில் அவன் படக்குழு – வைரலாகும் அப்டேட்!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… Yash: முடிவுகளைப் பற்றி எனக்குக் கவலையில்லை.. நடிகர் யாஷ் பகிர்ந்த விஷயம்!

Follow Us