AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

நடிகர் கார்த்தியின் மார்ஷல் படத்தின் தற்போதைய நிலை என்ன? வைரலாகும் தகவல்

Actor Karthis Marshal Movie Update | தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. இவரது நடிப்பில் உருவாகி வரும் மார்ஷல் படம் குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

நடிகர் கார்த்தியின் மார்ஷல் படத்தின் தற்போதைய நிலை என்ன? வைரலாகும் தகவல்
மார்ஷல்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 15 Nov 2026 07:52 AM IST

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்கள் பலர் உள்ளனர். வாய்ப்பு என்பது அவர்களுக்கு வாரிசாக இருப்பதனால் சுலபமாக கிடைத்தாலும் அந்த இடத்தை தக்கவைத்து கொள்வது என்பது அவர்களின் திறமையே தீர்மானிக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இப்படி இருக்கும் நிலையில் வாரிசு நடிகராக சினிமாவில் அறிமுக ஆகி தற்போது தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து மக்கள் மனதில் மிகவும் ஸ்ட்ராங்கான ஒரு எண்ணத்தை இவரது படம் என்றால் அது நிச்சயம் நன்றாக இருக்கும் என்ற எண்ணத்தை விதைத்தவர்தான் நடிகர் கார்த்தி (Actor Karthi). இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியான பெரும்பாலான படங்கள் ரசிகர்கள் கொண்டாடும் படமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் கார்த்தி நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து வரிசையாக படங்கள் உருவாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.

நடிகர் கார்த்தி நடிப்பில் அடுத்தடுத்து பலப் படங்கள் உருவாகி வந்தாலும் மக்களால் அதிகம் எதிர்பார்க்க கூடிய படமாக உள்ளது மார்ஷல். டாணாக்காரன் படத்தை இயக்கிய இயக்குநரும் நடிகருமான தமிழ் இந்தப் படத்தை எழுதி இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் நடிகர் கார்த்தி உடன் இணைந்து நடிகர்கள் கல்யாணி பிரியதர்ஷன், சத்யராஜ், ஜான் கொக்கன், ஆதி பினிசெட்டி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.

நடிகர் கார்த்தியின் மார்ஷல் படத்தின் தற்போதைய நிலை என்ன?

இந்த நிலையில் மார்ஷல் படம் குறித்த சில தகவல்கள் சினிமா வட்டாரங்களில் வெளியாகி தற்போது வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. அதில், மார்ஷல் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் 50–60 நாட்கள் மீதமுள்ளது. படக்குழுவினர் மீதமுள்ள காட்சிகளை டிசம்பர் இறுதிக்குள் அல்லது ஜனவரி 2027-ல் பொங்கலுக்குப் பிறகு ஒரே கட்டமாகப் படமாக்கி முடிக்கத் திட்டமிட்டுள்ளனர்.

இப்படத்தின் தயாரிப்பில் சில நிதிச் சிக்கல்கள் இருந்ததாகவும், அவை தற்போது சரிசெய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. கடற்கரை சார்ந்த கதையம்சம் கொண்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பை, அமைதியான சூழல் நிலவும் கடற்கரைப் பகுதிகளில் நடத்தத் திட்டமிட்டுள்ளனர். 2027-ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையன்று இப்படத்தைத் திரையரங்குகளில் வெளியிடப் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

Also Read… அன்பே சிவம் போன்ற படங்களை மீண்டும் இயக்காததற்கு இதுதான் காரணம் – இயக்குநர் சுந்தர் சி ஓபன் டாக்

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… சுயநலம்… ஸ்டேர்டஜி… குரூப்பிசம்… பிக்பாஸ் போட்டியாளர்கள் குறித்து பேசிய விஜய் சேதுபதி – வைரலாகும் வீடியோ!

Follow Us