நடிகர் கௌதம் ராம் கார்த்திக்கின் புதுப் பட டைட்டில் இதுதான்… வெளியானது அப்டேட்
Actor Gautham Ram Karthik New Movie Poster | நடிகர் கௌதம் ராம் கார்த்திக் அடுத்ததாக ஒரு அறிமுக இயக்குநரின் இயக்கத்தில் படம் நடிக்க உள்ளார். அந்தப் படத்தின் டைட்டில் போஸ்டரை நடிகர் ஆர்யா தற்போது வெளியிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகர் முத்துராமன் தான் இந்த குடும்பத்தில் இருந்து வந்த முதல் தலைமுறை நடிகராக உள்ளார். இவர் நடிகர்கள் எம்ஜிஆர் – சிவாஜியின் காலத்தில் நாயகனாக நடித்து வந்தது குறிப்பிடத்தக்கது. பல ஹிட் படங்களில் நடித்த முத்துராமனின் மகனாக தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆனார் நவரச நாயகன் கார்த்திக். இவர் தந்தையை மிஞ்சிய மகனாக 80 மற்றும் 90களில் பல சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வந்தார். அன்றைய இளம் பெண்களின் கனவுக் கண்ணனாகவும் நடிகர் கார்த்திக் வலம் வந்ததில் எந்த சந்தேகமும் இல்லை. இப்படி ஒரு சினிமா பின்னணி உள்ள குடும்பத்தில் இருந்து மூன்றாவது தலைமுறை நடிகராக தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆனவர் தான் நடிகர் கௌதம் ராம் கார்த்திக் (Gautham Ram Karthik).
இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வந்தாலும் அவரின் தாத்தா மற்றும் தந்தையின் படங்களைப் போல சூப்பர் டூப்பர் ஹிட் என்பது இதுவரை நிகழவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. இருந்தாலும் தொடர்ந்து தனது உழைப்பை தமிழ் சினிமாவில் வழங்கி வருகிறார் நடிகர் கௌதம் ராம் கார்த்திக்.




நடிகர் கௌதம் ராம் கார்த்திக்கின் புதுப் பட டைட்டில் இதுதான்:
இந்த நிலையில் நடிகர் கௌதம் ராம் கார்த்திக் நடிப்பில் அடுத்ததாக தமிழ் சினிமாவில் உருவாக உள்ள படம் செங்குலம் இந்தப் படத்தை இயக்குநர் சின்ன சாமி எழுதி இயக்க உள்ளார். மேலும் இந்தப் படத்தின் மூலம் இவர் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் ஆர்யா இந்த செங்குலம் படத்தின் டைட்டில் போஸ்டர் மற்றும் வீடியோவை வெளியிட்டு நடிகர் கௌதம் ராம் கார்த்திக் மற்றும் இயக்குநர் சின்ன சாமிக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read… டோரதி படத்திலிருந்து வெளியானது முத்துமணி வீடியோ பாடல்!
நடிகர் ஆர்யா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:
Wishing brother @Gautham_Karthik and director @Chinnasamy20969 and his team of #Sengulam 🔥🔥🔥❤️
Produced by #KannanRavi @KRGOffl
Co Produced by #DeepakRavi@Gautham_Karthik #chinnasamyponnaiah @thisisysr @GiftsonRobert #TamilArasan @MaheshMathewMMS #Monic https://t.co/k7kfoZpYcZ
— Arya (@arya_offl) November 14, 2026
Also Read… தர்மன் படத்தில் இத்தனை நாயகிகள் எதற்கு? இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து சொன்ன விசயம்