AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

வங்கக்கடலில் உருவாகும் புதிய புயல்.. தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு?.. என்ன சொல்கிறது வானிலை மையம்..

Tamilnadu Weather Today: தொடர்ந்து, நாளை (நவ.16) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவாகும் புதிய புயல்.. தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு?.. என்ன சொல்கிறது வானிலை மையம்..
கோப்புப் படம்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 15 Nov 2026 06:25 AM IST

சென்னை, நவ.15: தமிழகத்தில் இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில், தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, அதே பகுதியில் நீடிக்கிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது. தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 16-ஆம் தேதி மாலையில் தெற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் புயலாக வலுப்பெறக்கூடும். தொடர்ந்து, நவ.18ஆம் தேதி காலை 5.30 மணியளவில் தீவிரப் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: மேகதாது அணை விவகாரம்.. “அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுங்க”.. முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!!

இன்று மழைக்கு வாய்ப்பு:

அந்தவகையில், இன்று (நவ.15) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.

வரும் நாட்களில் மழை வாய்ப்பு:

தொடர்ந்து, நாளை (நவ.16) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். நவ.17ம் தேதி தென்காசி, தூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.

அதனைத்தொடர்ந்து, நவ.18ம் தேதி தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.

பலத்த காற்று வீசும் எச்சரிக்கை:

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இன்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், நாளை மற்றும் நாளை மறுநாள் மணிக்கு 50 முதல் 60 கி.மீ. வேகத்திலும் காற்று வீசக்கூடும். தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நவம்பர் 17-ஆம் தேதி முதல் மணிக்கு 60 முதல் 70 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். மத்திய வங்கக்கடல் பகுதியில் நவம்பர் 17 முதல் மணிக்கு 65 முதல் 75 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க: மதுரையில் காவல் நிலைய மரணம்.. புகாரளிக்க வந்தவர் சடலமாக மீட்பு.. ஆய்வாளர் உட்பட காவலர்கள் அதிரடி சஸ்பெண்ட்.. சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!!

சென்னை வானிலை நிலவரம்:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us