AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தள்ளுவண்டி காய்கறி கடைக்காரருக்கு ரூ.31 லட்சம் ஜிஎஸ்டி நோட்டீஸ் – விசாரணையில் வெளியான பகீர் தகவல்

Vegetable Seller GST Notice : வேலூர் அருகே தள்ளுவண்டியில் காய்கறி விற்பனை செய்பவருக்கு வந்த ஜிஎஸ்டி நோட்டீஸில் அவரது பெயரில் ரூ. 7.50 கோடி மதிப்பிலான வர்த்தகம் நடைபெற்றுள்ளதாகவும், அதற்காக ரூ.30 லட்சத்து 92 ஆயிரம் ஜிஎஸ்டி வரி பாக்கியைச் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது

தள்ளுவண்டி காய்கறி கடைக்காரருக்கு ரூ.31 லட்சம் ஜிஎஸ்டி நோட்டீஸ் – விசாரணையில் வெளியான பகீர் தகவல்
ஜிஎஸ்டி நோட்டீஸ்
Karthikeyan S
Karthikeyan S | Published: 14 Nov 2026 21:09 PM IST

வேலூர், நவம்பர் 14 : தள்ளுவண்டியில் காய்கறி விற்பனை செய்யும் வியாபாரிக்கு சுமார் ரூ.31 லட்சம் ஜிஎஸ்டி செலுத்தக்கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் (Vellore) மாவட்டம் குடியாத்தம் தரணம்பேட்டை பகுதியைச் சேர்ந்த வசீம் என்பவர் தள்ளுவண்டியில் ஒவ்வொரு வீதியாக காய்கறி விற்பனை செய்து வருகிறார். அவர்களது பெற்றோர் பீடி சுற்றும் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது.

தள்ளுவண்டி காய்கறி கடைக்காரருக்கு ரூ.31 லட்சம் ஜிஎஸ்டி நோட்டீஸ்

இந்நிலையில், கடந்த நவம்பர் 12, 2026 அன்று வசீமுக்கு ஜிஎஸ்டி அலுவலகத்தில் இருந்து நோட்டீஸ் ஒன்று வந்துள்ளது. அதில், அவரது பெயரில் ரூ. 7.50 கோடி மதிப்பிலான வர்த்தகம் நடைபெற்றுள்ளதாகவும், அதற்காக ரூ.30 லட்சத்து 92 ஆயிரம் ஜிஎஸ்டி வரி பாக்கியைச் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை பார்த்த வசீமுக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன், வசீமிடம், வேலை வாங்கித் தருவதாக அவரது பான் கார்டு, வங்கிக் கணக்கு தொடர்பான விவரங்கள் மற்றும் ஓடிபி ஆகியவற்றை வாங்கியுள்ளனர்.

இதையும் படிக்க : 6 அடி கழிவறை.. 5.5 அடி நபர்.. எப்படி தூக்கிட்டு தொங்கியிருக்க முடியும்.. மதுரை லாக்கப் மரணத்தில் வழக்கறிஞர் கேள்வி!

இந்த நிலையில் அவர்கள் தனது பெயரில் மோசடியில் ஈடுபட்டிருக்கலாம் என அவர் சந்தேகமடைந்தார். இதையடுத்து, இந்தச் சம்பவம் தொடர்பாக குடியாத்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில் காவல்துறையினர், இது தொடர்பாக வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்குமாறு அறிவுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனயையடுத்து வேலூர் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு வந்த அவர், தனது ஆவணங்களைத் தவறாகப் பயன்படுத்தி, தனது பெயரில் கோடிக்கணக்கில் போலி வர்த்தகம் நடைபெற்றுள்ளதாகவும், இந்த சம்பவத்தில தொடர்புடைய நபர்களைக் கண்டறிந்து, அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் புகார் அளித்துள்ளார். மேலும், லட்சக்கணக்கில் வரி செலுத்தக்கோரி அனுப்பப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரி நோட்டீஸ் குறித்து உரிய விசாரணை மூலம் நிவாரணம் பெற்றுத் தர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தள்ளுவண்டியில் காய்கறி விற்பனை செய்யும் வியாபாரிக்கு லட்சக்கணக்கில் வரி செலுத்தக்கோரி ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது ஆவணங்களைத் தவறாகப் பயன்படுத்தி, தனது பெயரில் கோடிக்கணக்கில் போலி வர்த்தகம் நடைபெற்றுள்ளதாகக் கருதப்படும் விவகாரத்தில் தொடர்புடைய நபர்களைக் கண்டறிந்து, அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வசீம் புகாரில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க : முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான செல்வ வரி வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு

மேலும், லட்சக்கணக்கில் வரி செலுத்தக்கோரி அனுப்பப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரி நோட்டீஸ் குறித்து உரிய விசாரணை மூலம் நிவாரணம் பெற்றுத் தர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். தள்ளுவண்டியில் காய்கறி விற்பனை செய்யும் வியாபாரிக்கு லட்சக்கணக்கில் வரி செலுத்தக்கோரி ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us