AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

கைதாகியும் அச்சமில்லை.. கோவையில் போலீஸ் முன் சீன் போட்ட கைதி.. அடுத்து நொடியே நடந்த டுவிஸ்ட்!

Popular YouTuber Arrested : கோவை பெண் யூடியூபர் அளித்த புகாரின் பேரில், திருச்செந்தூரை சேர்ந்த மற்றொரு ஆண் யூடியூபர் மணிகண்டனை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். அவர் காவல் நிலையத்தில் பேண்ட் பாக்கெட்டில் கைவிட்டபடி நின்றதை போலீசார் கண்டித்தனர்.

கைதாகியும் அச்சமில்லை.. கோவையில் போலீஸ் முன் சீன் போட்ட கைதி.. அடுத்து நொடியே நடந்த டுவிஸ்ட்!
கைது செய்யப்பட்ட யூடியூபர்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 14 Nov 2026 21:26 PM IST

கோயம்புத்தூர் மாவட்டம், சிவானந்தா பகுதியில் வசித்து வருபவர் விக்னேஸ்வரி. இவர், தனது யூடியூப் சேனலில் பொருள்கள் தயாரிப்பு குறித்த விளக்கம் வெளியிடுவதும், அதனை விற்பனை செய்யும் பனியையும் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரை சேர்ந்த மணிகண்டன் என்பவர் அவரது யூடியூப் சேனலில் விக்னேஸ்வரியின் வீடியோக்களை திருடி பதிவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. அந்த வீடியோக்களில், விக்னேஸ்வரியின் தொழில் மற்றும் அவர் விற்பனை செய்யும் பொருட்கள் குறித்தும், அவரைப் பற்றியும் எந்தவித ஆதாரமும் இன்றி பொய்யான குற்றச்சாட்டுகளை யூடியூப் சேனலில் பதிவிட்டதாக தெரிகிறது. இதைப் பார்த்த, விக்னேஸ்வரி இது தொடர்பாக மணிகண்டனை கண்டித்த போது, அவரது தொழிலில் நஷ்டத்தை ஏற்படுத்தும் வகையிலும், இத்துடன் முடித்து விடுவேன் என்று கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

யூடியூபர் மீது சைபர் கிரைமில் பெண் புகார்

இது தொடர்பாக கோயம்புத்தூர் இணைய வழி குற்றத்தடுப்பு பிரிவு காவல் நிலையத்தில் விக்னேஸ்வரி புகார் அளித்தார். அந்த புகாரில், தனது தொழிலுக்கு நஷ்டம் ஏற்படுத்துவதாகவும் எனது பெண்மைக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் எனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ஆகியவற்றை சோசியல் மீடியாக்களில் பதிவு செய்து அவதூறாக பேசி வருவதாக தெரிவித்திருந்தார். அந்த புகாரை பெற்றுக் கொண்ட போலீசார், திருச்செந்தூரை சேர்ந்த மணிகண்டன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தீவிரமாக தேடி வந்தனர். இதில், நீலகிரி மாவட்டம், ஊட்டியில் பதுங்கி இருந்த அவரை, உதவி ஆய்வாளர் லிங்கேஸ்வரன் தலைமையிலான போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

மேலும் படிக்க: ஜெம் வீரமணி வீட்டில் சிறுமி சடலம் புதைப்பு.. கற்பழித்து கொலையா? ஜேசிபி மூலம் தோண்டும் பணி தீவிரம்!

கோவை சிறையில் அடைக்கப்பட்ட நபர்

தொடர்ந்து, அவரை கோயம்புத்தூருக்கு அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், அவர் யூடியூபர் விக்னேஸ்வரியின் வீடியோக்களை திருடி தனது யூடியூப் சேனலில் பதிவிட்டு வந்தது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, மணிகண்டன் மீது, கொலை மிரட்டல், சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்துதல் என்பன உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இதைத் தொடர்ந்து, அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். முன்னதாக, கைது செய்யப்பட்ட மணிகண்டனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக போலீசார் அழைத்து செல்ல முயன்றனர்.

போலீஸ் முன் சீன் போட்ட கைதி

அப்போது, அவரை செய்தியாளர்கள் புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு செய்தனர். அப்போது, மணிகண்டன் தனது பேண்ட் பாக்கெட்டுகளில் இரு கைகளையும் விட்டவாறு ஹீரோ மாதிரி போஸ் கொடுத்தார். இதைப் பார்த்த காவலர்கள் அவரது கைகளை தட்டி விட்டு ஒழுங்காக இருக்குமாறு எச்சரித்தனர். அதையும் அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் சகஜமாக நின்றார். இந்த வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் படிக்க: மதுரை தனிஷ்க் கடையில் 15 கிலோ நகை கொள்ளை.. இன்ஸ்டா பிரபலம் உள்பட இருவர் கைது!

Follow Us