AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Sai Pallavi: எனது ஆல் டைம் ஃபேவரட் சாப்பாடு அதுதான் – சாய் பல்லவி சொன்ன விஷயம்!

Sai Pallavi favorite food: தென்னிந்திய சினிமாவில் ஸ்டார் நடிகைகளில் ஒருவராக இருந்துவருபவர் சாய் பல்லவி. இவரின் நடிப்பில் தமிழில் வெளியாக காத்திருக்கும் திரைப்படம்தான் ஓ.எம். முன்பு நேர்காணல் ஒன்றில் பேசிய சாய் பல்லவி, தனக்கு மிகவும் பிடித்த மற்றும் எப்போதும் பிடித்த உணவு என்ன என்பது குறித்து வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

Sai Pallavi: எனது ஆல் டைம் ஃபேவரட் சாப்பாடு அதுதான் – சாய் பல்லவி சொன்ன விஷயம்!
சாய் பல்லவி Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Updated On: 15 Nov 2026 08:58 AM IST

கோலிவுட் மக்கள் மத்தியில் ஒரு இயற்கை அழகியாகவும், சிறந்த நடிகையாகவும் இருந்துவருபவர் சாய் பல்லவி (Sai Pallavi). இவரின் நடிப்பில் தமிழில் பல திரைப்படங்கள் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கிறது. இவர் தமிழில் தனுஷ் (Dhanush) முதல் சூர்யா (Suriya) உள்ளிட்ட பல்வேறு நட்சத்திர நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நடிகையாக இருந்துவந்த சாய் பல்லவி, குறைவான படங்களிலே பல கோடி ரசிகர்களை தனது கைவசம் கொண்டுவந்தார். இவர் தற்போது பாலிவுட் சினிமாவில் நாயகியாக நடிக்க ஆரம்பித்துள்ள நிலையில், தனது 2வது இந்தி படத்திலேயே ரூ 1000 கோடி வசூல் நாயகியாக மாறிவிட்டார். இவர் 2வது இந்தியில் நடித்த திரைப்படம்தான் ராமாயணா (Ramayana Movie).

இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில், இதில் சீதையாக சாய் பல்லவி நடித்திருந்தார். இந்த படத்திற்கு பிறகு இவர் தமிழிலும் நடித்துள்ள புதிய படம்தான் ஓம் (O.M Movie) . இதில் அவர் வனத்துறை அதிகாரியாக நடித்துள்ளார். இந்நிலையில் முன்பு நேர்காணல் ஒன்றில், பேசிய சாய் பல்லவி தனக்கு பிடித்த உணவு மற்றும் எப்போது சாப்பிட பிடிக்கும் உணவு குறித்து தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: புதிய மைல்கல்லை எட்டிய தாய் கிழவி படம்… மகிழ்ச்சியில் படக்குழு

தனக்கு பிடித்த உணவு குறித்து சாய் பல்லவி சொன்ன விஷயம்:

அந்த நேர்காணலில் பேசிய சாய் பல்லவிடம், “தொகுப்பாளர் உங்களுக்கு எப்போதுமே பிடித்த உணவு என்ன?” என கேள்வி கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த சாய் பல்லவி, “எனக்கு எப்போதுமே வெஜிடேபுள்ஸ் மற்றும் பழங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

இதையும் படிங்க: பல்லவி அழுக்காதீங்க.. அத பாத்து நானும் – ராஜ்குமார் சாரும் அழுதோம் – சாய் பல்லவி சொன்ன சம்பவம்!

அதே போலவே எனக்கு ரசம் ரைஸ் எனக்கு ரொம்பவே பிடிக்கும். அதே போலவே எனக்கு குழி பணியாரம் எனக்கும் மிகவும் பிடிக்குமே அதில் கூறியிருந்தார். மேலும் எப்போது எனக்கு பழங்கள் மிகவும் பிடிக்கும், அதை ஒருபோதும் நான் வெறுத்ததில்லை” என அதில் அவர் பேசியிருந்தார்.

நடிகை சாய் பல்லவியின் இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by Sai Pallavi (@saipallavi.senthamarai)

நடிகை சட்ட பல்லவியின் நடிப்பில் இந்த 2026ம் ஆண்டில் மொத்தமாக 2 படங்கள் வெளியாகியுள்ளது. அதிலும் 3வது வெளியாக காத்திருக்கும் திரைப்படம்தான் ஓ.எம். இந்த படத்தில் இதுவரை நடித்திடாத போலீஸ் அதிகாரி வேடத்தில் சாய் பல்லவி நடித்துள்ளார்.

மேலும் 2026ம் ஆண்டில் இவரின் நடிப்பில் வெளியான ராமாயணா திரைப்படம் இதுவரை மொத்தமாக ரூ 1000 கொடிகளுக்கும் மேல் வசூல் செய்து சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றுள்ளது. இதற்கு பிறகு இவரின் நடிப்பில் 2027ம் ஆண்டு ஜனவரியில் இஞ்சி வெல்லம் என்ற படமும் வெளியாகிறது. இதை இயக்குநர் மணிரத்தினம் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us